ஒன்னு நாம கம்பீரமா இருக்கணும் , இல்லைனா கம்பீரமான கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது , இந்த ஞானம் மதுரன்னு ஒரு படம் வந்தப்பவே நம்ம தளபதிக்கு வந்திருக்கணும் , அதுக்கெல்லாம் கிட்னி இருக்கணும் என்பதால் நம்ம தளபதிக்கு இந்த விசயமெல்லாம் புரியாமல் போக இப்பொழுது தலைவா என்று ஒரு (பப்)படம் எடுத்து தன்னையும் அசிங்கபடுத்தி கொண்டு நம்மையும் கதறடித்திருக்கிறார். சுறா என்று ஒரு படம் அதை பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த பொழுது , இனிமேல் இதைவிட கேவலமான ஒரு படத்தை இவரே நினைத்தாலும் கொடுக்க முடியாது என்று நினைத்தேன் , ஆனால் நம் தளபதி , வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டாக்குட்டர் விஜய் அவர்கள் என் என்னத்தை தவிடு பொடியாக்கி இதோ இந்த தலைவாவை இந்த தமிழ் இனத்துக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார். (தளபதியை குறைத்து மதிப்பிட்ட பாவத்தை நான் இன்னும் ஒருமுறை சுராவையும் , தலைவாவையும் பார்த்துதான் தீர்க்க வேண்டும்) . தமிழர்களே உங்கள் வாழ்வை சோகம் கவ்வி கொண்டாலோ , இல்லை விதி உங்களை துரத்தி துரத்தி அடித்தாலோ கவலை படாதீர்கள் , இதோ உங்கள் சோகம் தீர்க்க நம் தளபதி தந்திருக்கும் மாமருந்துதான் சுறா , தலைவா என்னும் இரண்டு காவியங்கள் , படம் தொடங்கியது முதல் முடியும் வரை உங்கள் கவலைகளை மறந்து சிரித்து மகிழலாம் , சுறா இரண்டு மணிநேரத்திலேயே முடிந்து விட்டதால் படம் பார் த்த மக்கள் இன்னும் கொஞ்சம் நேரம் ஓடியிருந்தால் அதிகமாக சிரித்து சந்தோசமாக இருந்திருக்கலாமே என்று கவலைபட்டதன் விளைவு இதோ தமிழகத்தின் விடிவெள்ளி , ஆசியாவின் ஒபாமா அண்ணன் டாக்குடர் விஜய் அவர்கள் தலைவா படத்தில் உங்களுக்கு மூன்று மணிநேரம் சிரித்து மகிழும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் ...
இதுவரை தன்னை தலைவனாக காட்டி கொண்டவர்கள் எல்லாம் படத்தில் கிழவிகளையும் , ஏழைகளையும் மிஞ்சி மிஞ்சி போனால் தமிழக மக்கைளையும் காப்பாற்றும் பணியை , போட்டிருக்கும் மேக் அப் கலையாமல் செய்வார்கள் .. ஆனால் நம் தானை தலைவனோ ஒட்டு மொத்த இந்திய மக்களையும் ஓடி ஓடி காப்பாற்றுகிறார் ... இதன் மூலம் முதல்வர் போன்ற சின்ன பதவிகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு , நேராக டெல்லி செங்கோட்டைக்கே தளபதி குறிவைத்திருக்கிறார் என்பதை இந்த உலகுக்கு தெள்ள தெளிவாக புரியவைத்து ராகுல் காந்திகளுக்கும் , மோடிக்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் இயக்குனர் .(எங்கே இந்த படத்தை ஹிந்தியில் டப் செய்து , தியேட்டர்களுக்கு இவர்களே மொட்டை கடிதாசி போட்டு , மன்மோகன் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடை செய்கிறார் என்று மறைமுகமாக விளம்பரம் செய்தாலும் செய்வார்களோ என்று நம் பிரதமர் கலக்கத்தில் இருப்பதாக கேள்வி ).. இதுவரை அரசியல் படம் எடுத்த எந்த ஹீரோவும் செய்யாத ,செய்ய தயங்கிய ஒரு விஷயத்தை நம் தளபதி இந்த படத்தில் சத்தம் இல்லாமல் செய்து காட்டி அவர்களை எல்லாம் விட நான் தான் மாஸ் என்பதை நிரூபித்து விட்டார் , ஆம் MGR கூட தன படங்களில் தன்னை அண்ணாவை விட ஒரு படி கீழாக அவருடைய தொண்டனாக மட்டுமே காட்டியிருப்பார் , அனால் இந்த மாநிற MGR அண்ணா தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் நல்லது பண்ணினார் நான் இந்த இந்தியாவுக்கே நல்லது பண்ணுறேன் , நான் அவரை விட ஒஸ்தி என்று தைரியமாக சூளுரைத்திருக்கிறார் ... இதற்க்கு எதற்கு தைரியம் வேண்டும் என்று கேட்கிறீர்களா? இந்த காட்சியில் திரையரங்கில் பலரும் தன்னை மட்டும் இல்லை தன குடும்பத்தையே கெட்ட வார்த்தைகளால் கழுவி கழுவி ஊற்ற போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் அதற்க்கெல்லாம் பயப்படாமல் (கூசாமல் ) அந்த காட்சியை வைப்பதற்கு எங்கள் மாடர்ன் முருகன் , சென்னையில் பிறந்த புத்தன் , அநியாத்தை அழிக்க வந்த ஈசன் டாக்குடர் விஜயை விட்டால் இந்த கோடம்பாக்கத்தில் யார் இருக்கிறார்?
இந்த படத்தின் ஒட்டு மொத்த பலமும் கிளைமாக்ஸ்தான்.. அதுவே ஆயிரம் சுறாக்களுக்கு சமம் ... அண்ணாவாக மாறி நம்மை பார்த்து கும்பிடும் விஜய்க்குள் பத்து பவர் ஸ்டார்களும் , நூறு சாம் ஆண்டர்சன்களும் ஆயிரம் ராஜகுமாரன்களும் நம் கண்களுக்கு தெரிகிறார்கள்.. இந்த படத்தில்