நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன் ... சூப்பர் ஸ்டார் பேசுன வசனம் , அவருக்கு அப்புறம் இந்த வசனம் சரியா பொருந்தும்னா அது தல அஜித்துக்கு மட்டும்தான் ... சில பேரு வரிசையா நாலு படம் ஹிட் ஆனா பரபரப்பா பேசபடுவார்கள் , சில பேரு படத்துல ஏதாவது வித்தியாசமா பண்ணி பரபரப்பை உருவாக்குவாங்க , சில பேரு சன் டிவி புண்ணியத்துல அடிக்கடி பேட்டி கொடுத்தோ இல்ல ஏதாவது விளம்பரம் தேடிகிட்டோ பரபரப்பை உண்டு பண்ணுவார்கள் , ஆனா தமிழ் சினிமால ரெண்டே ரெண்டு பேருதான் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த படத்த பத்தின பரபரப்ப உண்டு பண்ணிருவாங்க ... அதுவும் அவங்களா உண்டு பண்ண மாட்டாங்க அதுவா பிரபலம் ஆகிரும் ... அதுல முதலாமவர் நம்ம சூப்பர் ஸ்டார் , அவர் எது பண்ணுனாலும் பரபரப்புதான் .. இங்க மட்டும் இல்ல ஜப்பானே பரபரப்பாகும் அவர் பட வேலைகளை ஆரம்பிச்சா ... அவருக்கு அடுத்து நம்ம தலைதான் ...
அவர் சாதாரணமா ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பல வதந்திகள் அந்த படத்த பத்தி கெளம்பும் ... இப்ப அவர் பண்ண போறது அவரோட அம்பதாவது படம் ... சும்மா விடுவாங்களா , அவருக்கே தெரியாத பல விசயங்கள இவங்க இஸ்டத்துக்கு கிளப்பி விட்டார்கள் ... தயாநிதி அழகிரி அவரோட அம்பதாவது படத்த தயாரிக்க போறாருன்னு சொன்ன வுடனே ஆரம்பிச்சிடுச்சி இந்த மங்காத்தா ஆட்டம் , பல இயக்குனர்கள் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிட்டு போய் விட்டார்கள் ..... கௌதம் மேனன் ஒரு போலீஸ் கதையோட தயாரா இருந்தாரு ஆனா தல அப்ப ரேஸ்ல பிசி .... படம் தள்ளி போச்சி ... உடனே கௌதம் மேனனுக்கும் அஜித்துக்கும் மனகசப்பு கௌதம் அஜித் படத்திலிருந்து விலகி விட்டாருன்னு ஒரு வதந்தி .... ஆனா கொதமே ஒரு பெட்டியில அது வதந்திதான் நானும் அஜித்தும் இணைந்து படம் பண்ணுவது உறுதின்னு அறிக்கை விட்டார்... அஜித் எப்ப வராரோ அப்பத்தான் படம் ஆரம்பிக்கணும்னு தயாநிதி உறுதியா சொல்ல , இடைப்பட்ட நாட்களை வீணாக்க விரும்பாமல் கௌதம் நடுநிசி நாய்கள் படத்த ஆரம்பிக்க போய் விட்டார் , அவரின் கணக்கு அஜித் படம் ஆரம்பிக்க அக்டோபர் மாதம் ஆகும் அதற்குள்ளாக இந்த படத்தை இயக்கி முடித்து விடலாம் என்பதே .. ஆனால் அஜித்தின் முடிவு வேறு மாதிரி அமைந்து விட்டது , அவர் ரேசை முடித்து விட்டு ஜூலை மாதமே வந்து விட , படம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க வேண்டிய நிலை .... கௌதம் கால்ஷீட் அக்டோபர் மாதமே இருக்க , அவரால் அஜித்தின் அம்பதாவது படத்தை இயக்க முடியவில்லை ... ஆனால் தயாநிதி இந்த கூட்டணியை இழக்க விரும்பவில்லை
அஜித்தின் அம்பத்தி ஒன்றாவது படத்தையும் அவரே தயாரிக்க முடிவு செய்து விட்டாராம் .. அந்த படம் டிசம்பர் ,மாதம் ஆரம்பிக்கும் இதே கூட்டணியுடன் ...
அம்பதாவது படம் கௌதம் இல்லை என்று முடிவானவுடன் வேறு இயக்குனர்களை வைத்து இயக்க தயாநிதி முடிவு செய்தார் , அவரின் மனதில் இருந்த முதல் இயக்குனர் வெற்றிமாறன் .. ஆனால் அவரின் வாய்கொழுப்பு அவருக்கு இந்த அருமையான வாய்ப்பை கைநழுவி போக செய்தது ... இந்த நிலைமையில் அஜித்தின் மனதில் தோன்றியவர்தான் அவரின் சினிமா உலக ரசிகரும் அவரின் நண்பருமான வெங்கட் பிரபு ,,, அஜித்திற்கு என்று ஒரு ராசி உண்டு அவர் சினிமாவில் கொஞ்சம் சறுக்கிய பொழுதெல்லாம் அவரி மீண்டும் வெற்றி படி ஏற்றியவர்கள் அவரின் நண்பர்களே(அகத்தியன் ,சரண் , S.J.சூரியா , K.S.ரவிக்குமார் ) ... இதற்க்கு முன்பு அந்த பணியை சரியாக செய்து வந்தவர் சரண் ஆனால் சமீப காலமாய் அவர் கற்பனை வறச்சியில் இருப்பதால் அவருக்கு மாற்றாக அஜித்துக்கு ஒரு இயக்குனர் தேவைபட்டார்.. உடனே அவரின் மனதில் வந்தவர்தான் இந்த வெங்கட் பிரபு... அஜித் படம் இயக்குவது என்றால் யாருக்குதான் கசக்கும் ... தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் சரி அவர் மக்களிடம் இருந்து அதிகமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் கேள்விகள் ரெண்டே ரெண்டுதான் ... ஒன்று எப்ப நீங்க சூப்பர் ஸ்டார இயக்க போறீங்க? இன்னொன்று எங்க தலையை வைத்து எப்ப நீங்க படம் பண்ண போறீங்க? என்பதுவே இதுதான் அவர்களின் மாஸ் ... கௌதம் மேனனே இதை பல பெட்டிகளில் கூறி இருக்கிறார்... அப்படி ஒரு வாய்ப்பு வந்தவுடன் வெங்கட்டும் தலைக்கு ஏற்ற மாதிரியும் அதே சமயம் அவரின் ஸ்டைல் முல்டி ஸ்டார் வகை கதை ஒன்றை கூற அது எல்லாருக்கும் பிடித்து போக , படம் முடிவாகி விட்டது ... ஒன்னாம் வகுப்புக்கு போற சின்ன கொழந்தைக்கு கூட தெரியும் அந்த படத்தோட பேரு மங்காத்தா என்பது .... எனக்கு தலை படங்களில் மிகவும் பிடித்த படம் தீனா , அதில் தலையும் சுரேஷ் கோபியும் ரணகளபடுத்தி இருப்பார்கள் அதே போல மங்காத்தாவில் தலையும் நாகர்ஜூனாவும் இணைகிறார்கள் ...
ஆனால் அஜித் கௌதம் மேனனை விட்டு வேறு இயக்குனருடன் இணைவது அவரின் ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை ... ஆனால் என்னை பொறுத்தவரை தல எடுத்திருக்கும் முடிவு மிக சரியான முடிவே ... கௌதமின் கடைசி மூன்று படங்களும் மரண மொக்கை படங்கள் ... மூன்றும் கொஞ்சமேனும் தப்பித்ததிர்க்கு காரணம் பாடல்களே ... தலையை வைத்து இப்படி ஏதாவது மொக்கை படம் கொடுத்தால் ரசிகர்கள் கொதித்து விடுவார்கள் ... எங்களுக்கு தேவை musical hit album இல்லை ஒரு மரண மாஸ் படமே வெங்கட் பிரபு அதை சரியாக கொடுப்பார் என்று நம்புவோம் , மேலும் கௌதம் அடுத்து அஜித்துடன் இணைவது உறுதி ஆகிவிட்டது , அதில் அவர் வேட்டையாடு விளையாடு போல ஒரு "மாஸ் பிளஸ் கிளாஸ்" படம் கண்டிப்பாக கொடுப்பார் ...
இப்படி அடுத்தடுத்து இரண்டு பிரமாண்ட படங்கள் பற்றிய செய்திகளில் சந்தோசத்தின் உச்சியில் இருக்கும் தல ரசிகர்களுக்கு அதைவிட இனிப்பான ஒரு செய்தி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது ... அஜித்தின் சினிமா வாழ்கையில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா .. ரஜினி பண்ணிய ஒரு படத்தை அவர் நடித்து கொண்டு இருக்கும் பொழுதே அதுவும் அவர் உச்சத்தில் இருக்கும் பொழுதே நடித்து அதில் கொஞ்சம் கூட ரஜினியை பின்பற்றாமல் தன்னுடைய பாணியில் நடித்து அதை வெற்றியும் பெற செய்வது சாதாரணமான விஷயம் இல்லை ... அந்த வெற்றியில் அஜித்துக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவரதன் ... இருவரும் மீண்டும் இணைகிறார்கள் ... இது சென்ற வருடமே ஆரம்பிக்க பட வேண்டிய படம் ... சில பிரச்சனைகளின் காரணமாக தள்ளி வந்து கொண்டு இருந்தது இப்பொழுது அது விஷ்ணுவரதனால் உறுதி செய்ய பட்டு விட்டது ... ஆம் தல மீண்டும் பில்லாவாக நடிக்க போகிறார் மிரட்டலாக .... தலையின் அம்பத்தி மூன்றாவது படமாக இது அமையும் ....
இப்படி அடுத்தடுத்து மூன்று மெகா கூட்டணி படங்கள் எங்களை இப்பொழுதே கண்ணா பின்னாவென்று எதிர்பார்க்க வைத்து விட்டது ... கண்டிப்பாக ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் பொழுது நாங்கள் ஒரு மினி தீபாவளியே நடத்தி காட்டுவோம் ....
அஜித் என்றாலே அவருக்கு போட்டியாக ஞாபகம் வரும் நடிகர் விஜய் ... அவரும் சமீப காலமாய் சொதப்பி கொண்டு இருந்தார் ... தல தளபதி போட்டி இல்லாமல் தமிழ் சினிமா கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் பங்களாதேஷ் கென்யா டெஸ்ட் மேட்ச் போல மந்தமாக போய் கொண்டு இருந்தது ... இப்பொழுது அவரும் முழித்து கொண்டு விட்டார் ... அவரின் அடுத்த மூன்று படங்கள் ராஜா , லிங்குசாமி , சங்கரை வைத்து எடுக்க போகிறாராம் .... ஆக அடுத்த இரண்டு வருடங்களில் இந்த இரண்டு குதிரைகளும் போட்டி போட்டுகொண்டு களத்தில் இறங்க போகின்றன ... மீண்டும் தல தளபதி போட்டி தமிழ் சினிமாவில் ஆரம்பிக்க போகிறது ... அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம் தமிழ் நாட்டில் ... இந்த ஆட்டம் உலக கிண்ண கால்பந்தை விட பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ...