Followers

Copyright

QRCode

Thursday, January 14, 2016

ஜல்லிக்கட்டும் சாராயமும்


தமிழ்நாட்டில் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு ஜல்லிக்கட்டுதான் . காளைமாட்டை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று PETA என்ற அமைப்பு களமிறங்க அதற்க்கு உச்சநீதிமன்றமும் துணை நிற்க இந்த வருடமும் ஜல்லிகட்டுக்கு தடை. பல நூறு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது , இவர்கள் சொல்வது போல ஜல்லிகட்டால் காளை இனத்துக்கு ஆபத்து என்பது உண்மையாயிருந்தால் இந்நேரம் காளை மாடுகள் எல்லாம் டைனோசர் காலத்திலேயே அழிந்திருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. இனபெருக்கம் செய்வதை தவிர வேறு ஒன்றுக்கும் உதவாத காளை மாடுகள் இன்னமும் அழியாமல் இருக்க ஒருவகையில் இந்த ஜல்லிக்கட்டும் காரணம். தென்தமிழகத்தில் காளைமாடுகள் ஜல்லிக்கட்டுக்க மட்டுமே வளர்க்கப்பட்டு வருகின்றன .  ஒரு காளை மாடு வளர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் , எவ்வளவு நேரம் அதற்காக அந்த குடும்பம் செலவழிக்க வேண்டும் என்பது அதை வளர்த்து பார்த்தால்தான் தெரியும் . இவ்வளவு செலவு , கால விரையம் இதையெல்லாம் மீறி காளை மாடுகள் வளர்க்கபடுகின்றன என்றால் இரண்டே காரணம்தான் . ஒன்று ரேக்ளா ரேஸ் , இன்னொன்று ஜல்லிக்கட்டு. எனக்கு தெரிந்து உலகத்திலேயே பணத்துக்கு முக்கியத்துவம் தராத ஆபத்தான விளையாட்டுக்கள் என்றால் இவை இரண்டுமாகத்தான் இருக்கும். எங்கெல்லாம் ஆபத்துகள் அதிகமாக இருக்குமோ அங்கெல்லாம் பணமும் அதிகமாக கிடைக்கும். ஆனால் பணம் இல்லாமல் முழுக்க முழுக்க வீரத்துக்கும் , இன கௌரவத்துக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியமான விளையாட்டுகள் இவைதான். காளை மாட்டை காரணம் காட்டி இந்த விளையாட்டுகளை முடக்க பார்பதற்கு பின்னால் ஏதோ பெரிய அரசியல் அல்லது வியாபார காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து பால் மார்கெட்டில் கை வைக்க ஏதோ சூழ்ச்சி நடப்பதாகவே தெரிகிறது . இனி ஜல்லிகட்டே நடக்காது என்ற நிலையை கொண்டு வந்து , காளை மாட்டு வளர்ப்பை கட்டுபடுத்தி அதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப ஏதோ புதிய விஷயத்தை வெளிநாட்டில் இருந்து இறக்கி நம்மை கேனையனாக்க நடக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது .இது கண்டிப்பாக நம் நீதி துறைக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் சட்டம் என்று ஒன்றுக்கும் உதவாத ஒரு விசயத்துக்கு அவர்கள் மரியாதை கொடுத்துதானே ஆகவேண்டும். நாடே வேண்டாம் என்று எதிர்த்த ஒரு அயோக்கியனுக்கு சிறுவன் என்று உப்பு சப்பில்லாத காரணத்தை காட்டி விடுதலை கொடுக்கவும் , ஒரு மாநிலமே  வேண்டும் என்று போராடும் விசயத்துக்கு மிருகவதை என்று தடை செய்யவும் நம் இந்திய சட்ட அமைப்பால்தான் முடியும் . 

ஜல்லிக்கட்டை போலில்லாமல் வருஷம் முழுவதும் நம் தமிழகத்தில் எப்பொழுதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் எவர்கிரீன் விஷயம் மதுவிலக்கு.முதல் நாள் நைட்டு சரகடிச்சிட்டு குப்பற கவுந்திட்டு அடுத்த நாள் போதை தெளிந்தவுடன் இந்த நாடு போற போக்கே சரியில்லைப்பா , எங்க பாத்தாலும் சாரயகடைய தொறந்து வச்சி மக்களை குடிக்க வச்சி நாட்டை குட்டி சுவராக்குரானுகப்பா , என்று டாஸ்மாக் எதிர்ப்பு வசனம் பேசுவதுதான் இன்னைக்கு தமிழ்நாட்டுல பேஷன். எனக்கு தெரிஞ்சி எல்லா பயபுள்ளைகளும் டாஸ்மாக்க மூடனும் , மதுவை ஒழிக்கணும்னுதான் பேசிகிட்டு திரியுறானுக , சாராயத்துக்கு ஆதரவா ஒரு குரல் கூட நம்ம தமிழ்நாட்டுல கேக்குறதில்லை , ஆனாலும் ஒவ்வொரு பண்டிகையிளையும் டாஸ்மாக் வசூல் அவதார் வசூலை மிஞ்சிக்கிட்டுதான் இருக்கு . இப்படி பொதுவுல மதுவிலக்கை பத்தி பேசுற பயபுள்ளைக மட்டும் குடிக்காம இருந்தாலே போதும் ஆட்டோமேட்டிக்கா வசூல் குறைஞ்சி மதுவிலக்கு தானா வந்திரும். அப்பறம் இந்த மதுவிலக்கை பத்தி பேசுற அல்லது போராடுற கட்சிகாரனுகளை கண்டாலே காண்டாகுது . டாஸ்மாக்கை மூடணும்னு பேசுற அரசியல்வாதிகளில் முக்காவாசி பேரு ஒருகாலத்துல கள்ள சாராயம் காச்சிகிட்டு கல்லாவை நிரப்புன  பயபுல்லைகதான். அவனுக பாதிபேரோட குறிக்கோளே  மறுபடியும் கள்ளசாராய மார்கெட்டை பிடிக்கனும்கிரதுதான். நாற்பது வயதை கடந்த கிராமத்துவாசிகளுக்கு தெரியும் கள்ள சாராயம் எவ்வளவு ஆபத்தான விஷயம் என்று . இன்று டாஸ்மாக் கடைகளை மூடினால் அதைவிட அதிக அளவில் மிக குறைந்த விலையில் எவனோ காய்ச்சி எவன் கல்லாவையோ நிரப்பும் கள்ள சாராய பாக்கெட்டுகள் புழக்கத்து வரும் . ஊழல் புரையோடிப்போன நம் அரசு அதிகாரிகளால் அதை கண்டிப்பா தடுக்க முடியாது. அந்த நிலைமை வந்தால் இப்பொழுது இருப்பதை விட நிலைமை இன்னும் மோசமாகும் . இப்பொழுது நூறு ரூபாய்க்கு கிடைக்கும் போதை இருபது ரூபாய்க்கு கிடைத்தால் என்னவாகும். நான் கண்டிப்பாக டாஸ்மாக் கலாச்சாரத்துக்கு பரிந்து பேசவில்லை . சாராயம் கண்டிப்பாக கட்டுபடுத்த பட வேண்டியதுதான். ஆனால் பணத்துக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் அரசியல்வாதிகளும் , வியாபாரிகளும் நிறைந்த  நம் சமூகத்தில் அரசாங்கமே நடத்தும் இந்த டாஸ்மாக் வியாபாரமே ஒரு கட்டுபாடாகத்தான் எனக்கு தெரிகிறது. முழுமையான மதுவிலக்கு சாத்தியபடுவது நாம் நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்பதில்தான் இருக்கிறது. இன்னமும் நம் நாட்டில் ஊழல் உள்ளே நுழைய முடியாத ஒரே இடம் நம் குடும்பம்தான்.

Saturday, November 14, 2015

வேதாளம் - தெறி

(என்னை அறிந்தால் படத்துக்கு எதுவும் எழுதாமல் இந்த படத்துக்கு எழுதுறானே அப்படின்னு நீங்க (வேற யாரு நம்ம அண்ணாவின் விழுதுகல்தான்) கேட்டா , அப்ப நான் ரொம்ப பிசி , இப்பவும் பிசிதான் இருந்தாலும் நீங்க எல்லாம் நம்மள மறந்துரகூடதுல அதான் சும்மா ஞாபக படுத்திட்டு போகலாமேன்னு )



தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த எல்லா நடிகர்களுக்கும் அவர்கள் சினிமா கேரியரில் சில படங்கள் திருப்புமுனையாக அமையும் . ஆனால் மிக சிலருக்குதான் ஒரே ஒரு படம் அவர்களை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் . தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான எம்ஜி ஆர் , ரஜினி ஆகியோருக்கும் அப்படி ஒரு படம் அவர்கள் கேரியரில் அமைந்ததது. அதுவரைக்கும் ஒரு சாதரமான ஆக்சன் ஹீரோவாக இருந்த அவர்களை தெறி ஹீரோக்களாக மாற்றியது அந்த படங்களே. கதையோ , திரைக்கதையோ , லாஜிக்கோ எதுவும் இல்லாமல் அவர்கள் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் மட்டும் போதும் பார்வையாளனை மயக்க என்று நிரூபித்த படங்கள் அந்த படங்கள் . ரஜினிக்கு பிறகு அப்படி ஒரு படம் யாருக்கும் அமையாது என்பதுதான்  நான்கு வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவின் நிலைமை . ஆனால் மங்காத்தா படம் வந்த பொழுது அந்த நிலைமையை கொஞ்சம் அசைத்து பார்த்தார் . அடுத்தடுத்து தல கொடுத்த சூப்பர் ஹிட்டுகளை மெஹா ஹிட்டாக மாற்ற சிவாவுடன் சேர்ந்து தல போட்ட பக்கா தெறி ப்ளான் வேதாளம் மூலம் அதை சுத்தமாக அடித்து நொறுக்கி அந்த வரிசையில் கம்பீரமாக அடுத்து அமர்ந்து விட்டார் தல. வேதாளம் படம் அவரின் சினிமா கேரியரில் மிக மிக முக்கியமான படம் . இந்த படத்தில் தல தவிர வேறு யார் நடித்திருந்தாலும் கண்டிப்பாக கழுவி கழுவி ஊற்றியிருப்பார்கள் . அப்படியான அடித்து துவைத்து காயபோட்ட ஒரு பழைய கதைதான் இந்த வேதாளம் , ஆனாலும் தல என்ற ராட்சசனின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் படத்தை தெறி ஹிட்டாக மாற்றியிருக்கிறது. கப்பலில் நடக்கும் சண்டையில் அழுது கொண்டே தன் முகத்தை கொடூரமாக மாற்றும் காட்சியில் நரம்பு முறுக்கேராதவன் கண்ணாடியை மறந்து வீட்டில் வைத்து விட்டு படம் பார்க்க வந்தவனாகத்தான் இருக்கும். நீ கெட்டவன்னா நான் கேடு கேட்டவன் என்ற வசனத்துக்கு பேமிலி ஆடியன்சே கை தட்டுகிறார்கள். திரையில் புளியோதரையாக சாப்பிட்டு சலித்து போயிருக்கும் அவர்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு காரமான செட்டி நாட்டு சிக்கன் பிரியாணி கிடைத்திருக்கிறது, கொண்டாடுகிறார்கள். கிளைமேக்ஸ் சீனுக்கு முன்னாள் தங்கை லக்ஷிமேணனை ஹோச்பிடலில் இருந்து அழைத்து வரும் ஸீன் தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் 1000 முறைக்கும் மேல் வந்திருக்கும் , ஆனால் அந்த காட்சியில் தல விரலை வைத்து காட்டும் ஸ்டைலில் திரையரங்கமே அதிர்கிறது. சிவா தல ரசிகர்களை தெறிக்க விட வேண்டும் என்பதற்காவே இந்த படத்தை எடுத்திருப்பார் போல , ஆனால் தல  அவர்களையும் தாண்டி பார்க்கும் எல்லோரையும் தெறிக்க விட்டிருக்கிறார். ஆனால் ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும் , அவர் சிரிச்சா விசில் சத்தம் பறக்குது , அவர் நடந்தா திரையாராங்கமே அதருது , அவர் ஆடுனா இவனுங்கலும் ஆடுராணுக. அவர் அழுதா இவனுங்களும் அழுவுராணுக, அவர் உடம்ப முறுக்கிக்கிட்டு நின்னா இவனுங்கலும் முறுக்கேறி நெஞ்ச நிமித்திகிட்டு கத்துராணுக .. தல இப்படியான ரசிகர்கள் கூட்டம் கிடைக்க நீ புண்ணியம் பண்ணியிருக்கணும். 

படத்தில் சொதப்பலே இல்லையா என்று கேட்கலாம்... அதையெல்லாம் படிக்கனும்னா காண்டேரி கெடக்குற புலி அண்ணா ரசிகர்களின் பிளாக்குல போய் படிச்சிகோங்க , சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணிட்டு இதுல ரசத்தை ஊத்தி சாப்பிட்டா கேவலமா இருக்கு, திருநெல்வேலி அல்வா மாதிரி இது இனிக்க மாட்டேன்கிதுன்கிற ரேஞ்சில எழுதி இருப்பானுக அதையெல்லாம் படிச்சிட்டு படத்தை போய் பாருங்க , அவனுங்களை தேடி வந்து காரி துப்புவீங்க.


அப்பறம் படத்தோட கலெக்சன் பத்தி நெறைய நியூஸ் வருது , தல எப்பவுமே கிங் ஒப் ஒபெநிங் தான் அதுல சந்தேகமே கிடையாது , அவரோட படங்களுக்கு சாதாரண நாளில் கிடைக்கும் ஒபெநின்க்தான் மற்ற நடிகர்களுக்கு தீபாவளியில் கிடைக்கும் , இதுல அவர் படம் தீபாவளிக்கு வேற வந்திருக்கு சொல்லவா வேணும் . எங்கள் ஊர் மதுரைக்கு அருகில் இருக்கும் சின்ன நகரம் . அதில் எனக்கு தெரிந்த நண்பர்கள் சேர்ந்து வேதாளம் படத்தின் முதல் நாள் 5 காட்சிகளை 6 லகரங்களுக்கு குத்தகைக்கு எடுத்து ஓட்டினார்கள், மாலை 6 மணி காட்சியை தவிர மற்ற நான்கு காட்சிகளும் அரங்கம் நிறைந்த காட்சிகள் , எல்லா காட்சியிலும் நின்று கொண்டு படம் பார்த்தவர்களே நூற்றுக்கும் அதிகம். அந்த ஒற்றை நாளில் அவர்கள் சம்பாதித்த பணம் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை பார்த்து நாம் சம்பாதித்ததை விட அதிகம். இரண்டாம் நாள் நிலைமை முதல்நாளை விட தெறி. இந்த இரண்டு நாளிலேயே தியேட்டர்காரன்  போட்ட பணத்தைவிட அதிகம் எடுத்து விட்டான் , இனி வருவது முழுவதும் அவனுக்கு லாபம்தான். இது என் கண்ணால் நான் கண்ட காட்சி அதனால் எழுதுகிறேன் மத்தபடி சிபி (sifi) சொல்லிட்டான்  , பிஹைண்ட் வூட்(behindwood) கூவிட்டான் என்று வரும் செய்திகளையெல்லாம் நான் எந்த காலத்திலும் நம்புவதில்லை..

வேதாளம் ஒத்த வார்த்தையில் சொல்லனும்னா "வீரம் மாஸ்னா இது பக்கா மாஸ்". சிவா அடுத்த ஆட்டத்தை சீக்கிரம் ஆரம்பிங்க நம்ம தலையோட  சேர்ந்து .. அணில் குஞ்சுகளை மறுபடியும் வீடுகட்டி அடிப்போம்.


 

LinkWithin

Related Posts with Thumbnails