Followers

Copyright

QRCode
Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Thursday, May 27, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?

இன்னைக்கு நாட்டுல நடக்கிற,, நடந்து முடிஞ்ச சில விசயங்கள பாக்குறப்ப எனக்கு இந்த வசனம் ஞாபகம் வருது... "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" ,, என்னோட சந்தேகங்களை எல்லாம் நான் சொல்லுறேன் ... பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க



1. நான் கைவிட்டு விட்டால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார் , பிரபுதேவா உருக்கம்


எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா நயன்தாரா அவ்வளவு நல்லவரா? இல்ல அவர இந்த அளவுக்கு நம்புற பிரபுதேவா ஒரு அரலூசா? பல பேரு கைவிட்டுதான் கடைசில இவரு கையில வந்து விழுந்துச்சி அந்த பீசு... இவரு விட்டா பிடிக்க இன்னொரு மடையன் மாட்டாமலா போய்டுவான்?..



2. கட்சியில் இருந்து ஒரு உருப்பினரைகூட இழக்க விருப்பம் இல்லை , ஜெயலலிதா கண்ணீர்



அம்மாவுக்கு எல்லாம் கைமீறி போன பின்னாடிதான் கட்சின்னு ஒன்னு இருக்கிறதே ஞாபகம் வருது ... எனக்கு என்னா சந்தேகம்னா,, யாரையும் இழக்க விரும்பவில்லை என்று அன்று திருநாவுக்கரசு ஆரம்பித்து சாத்தூர் ராமச்சந்திரன், மாதவன், அரங்கநாயகம், ராஜாராம், ராம. வீரப்பன், கருப்பசாமி பாண்டியன், செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன் என சத்தியமூர்த்தி வரை(நான் குறிப்பட்டது சிலர் மட்டுமே, ஆனால் இந்த பட்டியலில் ஆயிரத்துக்கு அதிகமானோர் உள்ளனர்) எல்லாரையும் இழந்துவிட்டீர்களே... இனியும் கட்சிய விட்டு வெளிய போக அங்க ஆளு இருக்கா ? உங்களையும் உங்க உடன்பிறவா சகோதரியையும் தவிர...



3. விஜய் படங்கள் வசூல் வரவில்லை , திரை அரங்க உரிமையாளர்கள் பலத்த நட்டத்தை சந்தித்து உள்ளனர் ... நட்டத்தை சரிகட்டாவிட்டால் அவருக்கு விரைவில் ரெட் கார்ட்-- திரை அரங்க உரிமையாளர்கள் சங்கம் மிரட்டல்



ஏனுங்கண்ணா விசை ... படத்துல மட்டும்தான் சூப்பர் ஸ்டார காப்பி அடிப்பீன்களான்னா? அவர மாதிரியே பஞ்ச் அடிக்கிறீங்க .. அரசியலுக்கு வர போறேன்னு உங்க அடிபொடிகள உசுப்பி விடுறீங்க... சம்பாதிச்ச காசுல கல்யாண மண்டபமா கட்டுறீங்க... நிஜ வாழகையில அவருக்கு இருக்கிற நேர்மைய follow பண்ண  மாட்டேங்கிறீங்க? ஒரு வார்தைக்காகவது காச திருப்பி தரேன்னு சொல்ல மாட்டேங்கிறீங்களே ... அத விடுங்க அடுத்த படத்துல உங்க நஷ்டத்த ஈடுகட்டிருவேன்னு வாய் சவாடலாவது விடலாம்ல... ஏனுங்கண்ணா உங்க படம் மேல உங்களுக்கே நம்பிக்க இல்லையா?


அப்புறம் அவரோட ரசிக கண்மணிகளுக்கு .. வசூல் சக்கரவர்த்தி ... அடுத்த ரஜினி , எங்க தளபதியால யாருமே நட்ட பட்டதில்ல அப்படி இப்படின்னு கைக்கு வந்ததெல்லாம் பதிவுல எழுதிகிட்டு இருந்தீங்களே ... இப்ப இப்படி ஆகி போச்சே? சொல்ல வேண்டியவங்களே உங்க தளபதியோட வசூல் வரலாற கிழிச்சி தொங்க விட்டாங்க.. இனிமே எப்படி உங்க பதிவுகளுள அவர பத்தி சப்ப கட்டு கட்டுவீங்க? ? இனிமேலாவது உண்மைய ஒத்துக்குவீங்களா இல்ல ஆப்ரிக்காவில் சுறா வசூல் சாதனை... நெல்சன் மண்டேலா விஜயின் செல்வாக்கை பார்த்து நடுக்கம் , அப்படின்னு ஏதாவது பதிவு போட்டு மறுபடியும் ஆரம்பிச்சிடுவீங்களா உங்க காமெடிய?



4. மங்களூரு விமான விபத்துக்கு காரணம் இன்னும் தெரியவில்லை , கருப்பு பெட்டியை ஆராய்ந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும்



என்ன காரணமா இந்த விபத்து நிகழ்ந்து இருந்தாலும் போன உயிர்கள் திரும்ப வராது... அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர நம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலாது ... எனக்கு என்ன சந்தேகம்னா அந்த காரணத்தையாவது சரியா விசாரிச்சி கண்டுபிடிச்சி , மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணி இனிமேல் இந்த மாதிரி விபத்து நடைபெறாமல் தடுப்பீர்களா? இல்லை விமானிதான் இறந்துட்டாரே , அவர் மேலே பழிய தூக்கி போட்டுட்டுவோம்னு , விமானியின் கவன குறைவே விபத்துக்கு காரணம் என்று விசாரணையை இழுத்து மூடி விடுவீர்களா? ( உலகில் விமானி இறந்த எந்த விமான விபத்துக்கும், விமானியின் கவன குறைவே காரணமாக இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி)



எனக்கு இன்னொரு கேணத்தனமான சந்தேகமும் வருது .. எவவளவு பெரிய விபத்து நடந்தாலும் விமானத்தோட கருப்பு பெட்டி மட்டும் அழியாதாம்.. கூட கொஞ்சம் செலவு பண்ணி மொத்த விமானத்தையும் அந்த கருப்பு பெட்டி மாதிரியே தயாரிச்சா உயிரிழப்புகள் குறைய வாய்ப்புகள் வருமா? ( சுறா படம் பாத்ததில இருந்து  எனக்கு ஏன் இப்படிலாம் யோசனை வருது? )


பிடிச்சிருந்தா வோட்டு போடுங்க ...

Saturday, April 3, 2010

யார் கவிஞன்?

                               

                                 தேடி சோறு நிதம் தின்று


                                  கூடி பல சின்னச்சிறு கதைகள் பேசி


                                  மனம் வாட துன்பம் மிக உழன்று


                                  பிறர் வாட தீமை பல செய்து


                                   நரை கூடி கிழப்பருவம் எய்து


                                   கொடுகூற்றுக்கிரையென மாயும்


                                   பல வேடிக்கை மனிதர் போல்


                                   நான் வீழ்வேன் என நினைத்தாயோ?



என் மனம் கவர்ந்த பாரதியாரின் பாடல் , நேற்று தூத்துக்குடியில் இருந்து அருப்புகோட்டைக்கு பேருந்தில் பயணம் செய்தேன், வண்டி எட்டயபுரம் வழியாக சென்றது , அப்பொழுதுதான் பாரதியாரின் நினைவு வந்தது எனக்கு.... எவ்வளவு பெரிய கவிஞன் அவர், எதற்காகவும் தன்னுடைய கொள்கைகளை விட்டு கொடுக்காமல் கடைசி வரை வறுமையுடனே வாழ்ந்தவர்.... தன்னுடைய கவித்திறமையை என்றைக்குமே காசுக்கு விற்க்காதவர்.... பாரதியாரின் காலத்தில் நம் சமூகத்திற்கு தேவையாய் இருந்தது அந்நிய சக்திகளிடம் இருந்து விடுதலை... அவர் தன திறமையை அதற்காக பயன்படுத்தினார்... அவர் நினைத்திருந்தால் அன்று ஆங்கிலேயர்களுக்கு சொம்பு தூக்கி பதவி பணம் என்று தன வாழ்க்கையும் தன பிள்ளைகளின் வாழ்க்கையையும் மேம்படுத்தி இருக்கலாம், அவர் செய்யவில்லை.... கடைசி வரை அவர்களுக்கு எதிராகவே மக்களிடம் விடுதலை உணர்ச்சியை தூண்டும் விதமாகவே அவர் பாடல்கள் இருந்தன.....



இன்றைய காலகட்டத்தில் ஏன் அவரை போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லை... தமிழனின் திறமை குறைந்து விட்டதா? இல்லை அவனின் தன்மானம் அழிந்து விட்டதா? இன்றும் நம் நாட்டில் பல கவி பேரரசுகள் இருக்கிறார்கள் , நாட்டில் பல பிரச்சனைகளும் இருக்கின்றன.... ஆனால் பாரதி போல ஒருவரும் இல்லை ... திறமை இருக்கின்றவர்கள் இன்று ஆளுபவர்களுக்கு கூஜா போட்டு கொண்டு இருக்கிறார்கள் இல்லை சினிமாவில் கதாநாயகியின் மார்பை வர்ணித்து கொண்டு இருக்கிறார்கள்....

அவர்கள் திறமை பாரதியை போல மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்க பயன்படவில்லை... மாறாக ஆளுபவர்களின் முதுகு சொறியத்தான் பயன்படுகிறது... மக்களுக்காக பாட்டு எழுதி வறுமையில் வாழ்ந்து அனாதையாய் சாக அவர்கள் ஒன்றும் பாரதி இல்லையே? அவர்களுக்கு இந்த சமூகத்தை விட அவர்களின் வாழ்க்கை அவர்கள் பிள்ளைகளின் சொகுசுதான் முக்கியம்... இருந்து விட்டு போகட்டும் , எல்லாரும் அப்படிதானே , எனக்கு இதில் ஒரு கோபம் என்ன வென்றால் மக்களுக்கு பயன்படாத கவிதைகள் எழுதும் இவர்களுக்கு ஏன் கவிபேரரசு , வாலிப கவிஞன் என்று பட்டம், இவர்களை நாம் இப்படி பட்டம் வைத்து கூறினால் அது நாம் பாரதிக்கு செய்யும் பெரிய அவமானம் .... பாரதிக்கு வாழும் பொது எதுவுமே கொடுக்காத நாம் , அவர் இறந்த பிறகு அவருக்கு செய்யும் ஒரே ஒரு மரியாதை கவிஞன் என்னும் பட்டம் அவருக்கு மட்டுமே, வேறு யாரையும் அந்த பட்டம் கொடுத்து அழைக்காமல் இருக்கலாம்... மற்றவர்களை பாடல் ஆசிரியர் என்று அழைத்தால் போதாதா?



ஆனால் இது நடக்காது , கலைஞர் என்னும் பட்டம் என்றுமே ஒருவருக்கு மட்டுமே , வேறு யாருமே அந்த பட்டதை தன பெயருக்கு முன்னாடி வைத்து கொள்ளமுடியாது.. அவர் எந்த கலையில் அறிஞர் என்பது அவருக்கே தெரியாது , இருந்தாலும் கடைசி வரை அவர் மட்டுமே கலைஞர் .... காரணம் அதிகாரம்........ திறமை , நல்ல மனம் இவற்றை விட அதிகாரம்தான் எதையும் சாதிக்கும்.... நம்மால் எதையும் சாதிக்க முடியாது நம்மால் இயன்ற ஒரே ஒரு விஷயம் நாமாவது இனி மேல் இவர்களை கவிங்கர்கள் என்று கூறாமல் இருக்கலாம்... ஏதோ அந்த மகா கவியின் திறமைக்கும், அவரின் அடிபணியாமல் வாழ்ந்த வாழ்க்கைக்கும் நம்மால் செய்ய முடிந்த ஒரு சின்ன மரியாதை....
 
(நான் முதல் பத்தியில் எழுதியிருக்கும் பாடலை வெறும் கற்பனையாய் பாரதி எழுதவில்லை , அதை போலவே வாழ்ந்து காட்டியவர் அவர்... இன்று தன்னை கவின்கர்கள் என்று சொல்லி கொள்ளும் அனைவரும் அந்த பாடலில் பாரதி கூறியதிற்கு எதிர்மறையாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் , இவர்களை எப்படி பாரதியை போல கவிஞர் ஜாதியில் சேர்க்க முடியும் , கவிதை எழுதுபவர் எல்லாம் கவிங்கனா?)

Saturday, March 27, 2010

குண்டு வக்கிரவன எல்லாம் விட்டிடுங்க....



நம் நாட்டில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரு கனவு வாழ்கையில ஒருதடவையாது வெளிநாடு பயணம் போகணும் அப்படிங்கிறது... அதுவும் என்ன மாதிரி கிராமத்தில பிறந்து வளர்ந்த பசங்களுக்கு விமானத்த பாக்குறதே ஒரு கனவு மாதிரி பிரமிப்பா இருக்கும் ... வானத்துல சிறுசா ஒரு புள்ளியா சத்தம் கொடுத்துகிட்டே பறந்துகிட்டு இருக்குற ஒரு விமானத்த அது கண்ணுக்கு தெரியிற வர தரையில தொரத்திக்கிட்டே மூட்சிரைக்க எத்தன தடவ ஓடியிருப்போம்... நம்ம பாத்த அந்த விமானத்த பத்தி அத பாக்காம போன நண்பன்கிட்ட எப்படி எல்லாம் பிரமிப்பா அதோட பிரமாண்டமான சத்தத்தையும் வேகத்தையும் சொல்லிருப்போம்....


அந்த வயசுல எப்பாவாது மதுர பக்கம் பஸ்சுல போனா ஏர்போர்ட் தாண்டி போறப்ப அங்க நிக்கிற விமானத்த ரொம்ப நெருக்கமா பாத்துட்டா அன்னைக்கி இரவு முழுவதும் தூக்கமே வராது , அப்பாகிட்ட விமானத்த பத்தி நெறைய சந்தேகம் கேட்டுகிட்டே அவரோட தூக்கத்தையும் கெடுத்துகிட்டு இருந்திருப்போம்... எப்பப்பா என்ன விமானத்துல கூட்டி கிட்டு போவேன்னு ?கேட்டா , நீ பெரிய பையன் ஆகி நல்ல வேலைக்கி போய் நல்லா சம்பாதிச்சி என்னையும் அம்மாவையும் உன் தம்பியையும் கூட்டிடு போடான்னு அவர் சொல்லுறப்ப இதுக்காகவாது நல்லா படிச்சி நல்ல வேலைக்கி போகணும்னு மனசு ஆசைபடும் ....

இப்ப நல்லா (ஓரளவுக்காது ) படிச்சி ஒரு நல்ல வேலைக்கி வந்தாச்சி, நான் வேல பாக்குற இடத்துல ஒரு நாள் ஒரு சர்குலர் வந்தது , மே மாதம் ஒரு வாரம் சிங்கப்பூர் ட்ரிப் , விருபபட்டவங்க வரலாம் , எல்லா ஏற்பாடுகளும் நிர்வாகம் பாத்துக்கிடும் , பயண செலவு மட்டும் அவரவர் பார்த்து கொள்ள வேண்டும் என்று , நான் என் நீண்ட நாள் கனவு நிறைவேற போகும் சந்தோஷத்தில் உடனே வீட்டிற்கு போன் செய்து கேட்டேன் , என் அப்பாவும் அம்மாவும் அலுவலக பணிகள் இருக்கும் என்பதால் வர இயலாது நீயும் தம்பியும் போயிட்டு வாங்கடா என்று சொன்னார்கள் , என் தம்பியிடம் போன் செய்து கேட்டேன் அவன் மே மாதம் எனக்கு கம்பெனியில் ஒரு வாரம் விடுமுறை தருவார்கள் , நானும் வருகிறேன் என்று சொல்லி விட்டான் , நானும் இங்கு என் பெயரையும் என் தம்பி பெயரையும் கொடுத்து விட்டேன்.

பாஸ்போர்ட் இல்லாதவர்கள் மார்ச் மாத இறுதிக்குள் தந்து விட வேண்டும், விசா வாங்க எளிதாய் இருக்கும் என்று சொல்லி இருந்தார்கள் , என்னிடம் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தினால் ஜனவரி மாதம் எங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க சென்றேன் .

அங்கு நிறைய agentகள் என்னிடம் பேரம் பேசினார்கள் , ஒருவர் ரெண்டாயிரம் மட்டும் கொடுங்கள் பத்தே நாளில் தக்கல் இல்லாமல் சாதா விண்ணப்பத்தில் நான் பாஸ்போர்ட் எடுத்து தருகிறேன் என்று கூறினான், என்னுடன் என் நண்பன் ஒருவன் வந்து இருந்தான் அவனிடம் ஒரு முக்கியமான ஆவணம் இல்லை , எனவே அவன் அந்த ஏஜென்டிடம் விசாரித்தான் , கூட ஒரு ஆயிரம் செலவாகும் என்று பதில் வந்தது அவனும் சரி என்று கூறி விட்டான்...

இப்பொழுதெல்லாம் பாஸ்போர்ட் விண்ணபித்த நாற்பது நாட்களுக்குள் வந்து விடும் என்பதால் நான் நேரடியாக விண்ணபித்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன் , பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள ஒரு கடையில் ஆன்லைன் வசதி உள்ளது என்று அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் கூறினார் அந்த கடைக்கே சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டு வந்து கொடுத்தேன் .

அந்த அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணபிக்க வரும் நபர்களின் விண்ணபத்தையும் அவர்கள் கொண்டு வந்திருக்கும் ஆவணங்களையும் சரி பார்க்க ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு இருந்தார் அவர் வேலையே தேவையான எல்லா ஆவணங்களும் உள்ளதா என்று சரி பார்ப்பது மட்டுமே... ஏதேனும் இல்லாமல் இருந்தால் அவரே சொல்லி விடுவார் நாம் அடுத்த நாள் வந்து நம் விண்ணபத்தை அந்த ஆவணத்துடன் கொடுத்து கொள்ளலாம்...

என்னுடைய விண்ணபதையும் சான்றிதல்களையும் சரிபார்த்த அலுவலர் அனைத்தும் சரியாக இருக்கிறது,, நாங்கள் இன்றே இந்த விண்ணப்பத்தை மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறோம் இன்னும் முப்பது நாட்களில் உங்களுக்கு பாஸ்போர்ட் வந்து விடும் என்று கூறினார் ... நானும் மிகுந்த சந்தோசத்துடன் வந்து விட்டேன் ...

விண்ணபித்த பத்து நாளில் போலீஸ் நிலையத்தில் இருந்து போன் வந்தது for police verification, அவர்கள் விசாரித்து விட்டு வங்க வேண்டியதை வாங்கி விட்டு , நாளைக்கே verification முடித்து அனுப்பி விடுகிறோம் என்று சொல்லி விட்டார்கள் , அடுத்த இரண்டாம் நாள் எனக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து SMS வந்தது police verification completed, passport under progress என்று , சரி எல்லாம் முடிந்து விட்டது இன்னும் ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் வந்து விடும் என்று நினைத்திருந்தேன்..

ஆனால் ஒரு மாதம் ஓடி விட்டது எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை, அப்பொழுதுதான் என்னுடைய விண்ணப்பத்தின் online status பார்த்தேன் அதில் நான் வேலை பார்க்கும் இடத்தில இருந்து சான்றிதழ் வாங்கி தரவில்லை என்று இருந்தது , என்னடா இது வம்பா போச்சி என்று அடுத்த நாளே நான் வேலை பார்க்கும் இடத்தில இருந்து சான்றிதழ் வாங்கி கொண்டு மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் சென்றேன் .

அங்கெ வெளியே வெயிலில் இரண்டு மணி நேரம் கியூவில் நின்று விட்டு பிறகுதான் உள்ளே போக முடிந்தது , தினமும் நூற்றுகணக்கான பேர் வெயிலில் ரெண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் வரிசையில் நிற்கும் இடத்தில ஒரு கூரை கூட இல்லை , நான் உள்ளே சென்ற வுடன் என்னை inquiry கௌண்டரில் வெயிட் பண்ண சொன்னார்கள் , அந்த கௌண்டரில்ஒரு மணி நேரமாக எந்த அலுவலரும் வர வில்லை

பின்னர் ஒருவர் வந்தார் அவரிடம் நான் நடந்ததை கூறி நான் வாங்கி வந்த சான்றிதழையும் காண்பித்தேன் , ஆனால் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து இது சம்பந்தமாக உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தோமே அதை எங்கே என்று கேட்டார், நான் எனக்கு எதுவும் கடிதம் வரவில்லையே என்று கூறினேன், உடனே அவர் என்னுடைய முகவரியை வாசித்து காட்டி சரி பார்த்து கொண்டார். பின் இந்த முகவரிக்கு மார்ச் நான்காம் தேதியே ஒரு கடிதம் அனுப்பி விட்டோம் அதை நீங்கள் கொண்டு வந்து காட்டினால்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்(நான் சென்று இருந்தது மார்ச் 16 ஆம் தேதி), நான் கையோடு எடுத்து போய் இருந்த என்னுடைய விண்ணப்பத்தின் online satusஐ காட்டினேன் , அவர் இதெல்லாம் செல்லாது அந்த கடிதம்தான் வேண்டும் என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்...

அவர்கள் அந்த கடிதத்தை நான்காம் தேதியே அனுப்பி இருந்தால் எனக்கு கண்டிப்பாய் இரண்டு நாட்களுக்குள் கிடைத்திருக்கும் , ஒருவேளை அவர்கள் முகவரி தப்பாய் அனுப்பி இருந்தால் அவர்களுக்கு கடிதம் ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்திருக்கும் , இரண்டுமே நடக்க விலை , அவர்கள் கண்டிப்பாய் கடிதம் அனுப்பி இருக்க மாட்டார்கள்...

மீண்டும் அந்த கடிதம் எனக்கு அனுப்பப்படுமா என்று நான் கேட்டேன் , அவர் ஒரு request கடிதம் எழுதி கொடுங்கள் அடுத்த மாதம் முதல் வாரம் நாங்கள் உங்களுக்கு கடிதம் அனுப்பி வைப்போம் என்று கூறினார்... அதற்குள் எனக்கு பாஸ்போர்ட் சமர்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்து விடும் வேறு வழியே இல்லையா என்று அவரிடம் கேட்டேன் அவர் இதுதான் ஒரே வழி என்று கூறி விட்டு சென்று விட்டார்... ஒரு கடிதத்தினால் என்னுடைய சிங்கப்பூர் பயணம் ரத்தான வருத்தத்தில் அவர் கேட்ட request கடிதத்தை எழுதி கொடுத்து விட்டு வந்து விட்டேன் ... என்னுடன் விண்ணபித்த அந்த நண்பனுக்கு சொல்லியதை போலவே ஒரு ஆவணம் இல்லாமலே பத்தே நாளில் பாஸ்போர்ட் வந்து விட்டது..

எனக்கு என்ன சந்தேகம் என்றால் நான் முதல் முறை பாஸ்போர்ட் விண்ணபித்த அலுவலகத்தில் என்னுடைய ஆவணங்களைஎல்லாம் சரி பார்த்த அந்த அலுவலர் முதலிலேயே சொல்லி இருந்தால் அன்றே என்னுடைய வேலை பார்பதற்கான அந்த சான்றிதழை கொடுத்து இருப்பேன் , பிரச்சனை இல்லாமலே பாஸ்போர்ட் கிடைத்திருக்கும் , அவர் தேவை இல்லை என்று நினைத்த ஒரு ஆவணத்தை மேலே உள்ள அதிகாரிகள் தேவை என்று சொல்லுகிறார்கள் ஏன் இந்த குழப்பம்? இதனால் பாதிக்கபடுவது மக்கள்தானே? ...

பாஸ்போர்ட் அலுவலக இணைய முகவரியில் நம்முடைய விண்ணப்பத்தின் தற்போதைய நிலைமையை தெரிந்து கொள்ளுவதற்கான வசதியை வைத்து இருக்கின்றனர் , ஆனால் அதை மட்டும் வைத்து நாம் எதுவும் செய்ய முடியாது ... அவர்கள் கைப்பட நமக்கு அனுப்பிய கடிதத்தை கொண்டு மட்டுமே நாம் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் , அப்படி என்றால் அந்த வசதி எதற்கு? சரி அவர்கள் கடிதமாவது உடனே அனுப்ப வேண்டாமா?

எத்தனையோ படிப்பறிவில்லா மக்கள் வெளிநாட்டில் கூலி வேலை பார்க்க பாஸ்போர்ட் எடுக்க விண்ணபித்து உள்ளனர், அவர்களுக்கு இந்த வசதி தெரிவதில்லை, அவர்களுக்கு கடிதம் அனுப்பினால் மட்டுமே நிலவரம் தெரிய வரும் , எத்தனையோ பேர் எவ்வளவு அவசரத்தில் இருப்பார்கள் இந்த பாஸ்போர்ட்க்காக? இப்படி மெத்தனமாக இருந்தால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்படும்?

பாஸ்போர்ட் வழங்குவது என்பது பெரிய சிக்கலான காரியம் அதில் நாட்டின் பாதுகாப்பே அடங்கி உள்ளது என்று நீங்கள் கூறினால் உங்களுக்கு பதில் கூற எனக்கு ஒரு படத்தில் விவேக் பேசும் " இத மட்டும் கரக்டா சுடுங்கப்பா,, ஆனா வீரப்பன் வந்தால் மட்டும் விட்டிடுங்க"( அப்ப வீரப்பன் சாகவில்லை)" என்ற வசனம்தான் ஞாபகம் வருகிறது ,

"எங்களையெல்லாம் இப்படி அலைய விடுங்கப்பா , ஆனா குண்டு வைக்கிறவன மட்டும் கரக்டா விமானத்துல ஏத்திகோங்க"

(புடிச்சிருந்தா வோட்டு போடுங்க....பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க)

Monday, March 22, 2010

இட ஒதுக்கீடும்.... ஹைதராபாத் ரேணிகுண்டாவும்......





பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு தந்தாலும் தந்தாங்க, பொண்ணுங்க இம்ச தாங்க முடியல.... இப்பவே எல்லா இடத்துலயும் அவங்கதான்.. ஒரு பையனால நிம்மதியா பஸ்சுல போக முடியுமா சென்னையில? எல்லா சீட்டும் பிரீயாதான் இருக்கும் ஆனா இவனால ஒக்கார முடியாது... கேட்டா அது லேடீஸ் சீட்டாம்... சரி உக்காரதான் முடியல ஓரமா நின்னுகிட்டாது போவோம்னு நின்னா தம்பி லேடீஸ் சீட் பக்கத்துல நிக்காத கொஞ்சம் தள்ளி வா அப்பிடின்னு நடத்துனர் சத்தம் போடுவாரு... சரிப்பான்னு பஸ் நடுவுல நின்னா அடுத்த ஸ்டாப்புல காலேஜ் பொண்ணுங்க திமு திமுன்னு ஏறி வருவாங்க.. உடனே நம்ம பெண்கள் காப்பாளர் நடத்துனர் , தம்பி அதான் பொண்ணுங்க வருராங்கள கொஞ்சம் தள்ளி அவங்களுக்கு இடம் விட வேண்டியதுதான அப்படின்னு நமக்கு கடுப்ப கிளப்புவாரு... போயா அப்படின்னு நாம புட் போர்டு பக்கம் போய் நின்னோம்னா "சாவு கிராக்கி" மேல ஏறி வான்னு ஓட்டுனர் அண்ணாச்சி நமக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பாரு, அத கேட்டவுடனே பஸுல உக்காந்து வர்ற எவளாவது சிரிப்பாலுக , அப்ப நமக்கு வரும் பாருங்க ஒரு கோபம் கெட்ட வார்த்தையில நாலு திட்டு திட்டணும்னு தோணும் , திட்டுனா என்ன ஆகும்னு நெனச்சி பாத்தா நமக்கு கெட்ட வார்த்தைகளே மறந்து போற அளவுக்கு போலீசுகிட்ட அடி விழும்.... அவங்ககிட்ட சொல்லவா முடியும் டிரைவர் என்ன திட்டுனதுக்கும் , நான் அவள திட்டுனதுக்கும் காரணம் இந்த இட ஒதுக்கீடுதான்னு... (இப்ப பஸ்சுல மட்டும்தான் இந்த நிலைமை இனிமே எல்லா எடத்துலயும் இப்படி ஆயிடுமோ?)

               
IPl வியாபராம் நல்லா போய்கிட்டு இருக்கு மோடிக்கு.... இன்னும் புதுசா ரெண்டு அணிகள் உருவாக்கி இருக்காரு... விலைய பாத்தா ரெண்டுமே ஆயிரம் கோடி... எனக்கு இப்பதான் ஒரு விஷயம் புரியிது.... மொத IPl ல எல்லா அணிகளுமே 500 கோடிக்கும் கம்மியாதான் விலை போய் இருந்தது... இப்ப அதே மாதிரியான அணிகள் 1000 கோடி... அப்படினா 500 கோடிக்கு வாங்குனவனுக்கு இது வரைக்கும் குறைந்தபட்சம் 500 கோடி லாபம் கெடச்சிருக்கும்.... எல்லாம் யார் வீட்டு காசு .... நாம வீணா பொழுத போக்குற நேரம்தான் அவங்களுக்கு காசா மாறி கல்லாவ நெரப்புது.... முன்ன எல்லாம் ஒரு ஓவர் முடிஞ்ச பின்னாடிதான் விளம்பரம் போடுவானுக இப்ப என்னடான்னா 3 பந்துக்கு ஒருதடவ ஒரு விளம்பரம்... அதுவும் மைதானத்துல இருக்குற பெரிய டீவீயில ஓடுற விளம்பரத்த அப்படியே காட்டுறானுக ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... எனக்கு இதுவரைக்கும் ஒரு கிரிக்கெட் வீரனை பார்க்கும் பொழுது நாட்டின் மானதிற்க்காக விளையாடும் ஒரு போர் வீரர்களை போலதான் தெரிந்தார்கள் ஆனால் IPL லில் அவர்களை பார்க்கும் பொழுது கிண்டி ரேசுல ஓடுற குதிரை மாதிரி ரொம்ப பாவமா தெரியிறாங்க 




என்னதான் நாம இப்படி வாய் கிழிய பேசுனாலும் போட்டிகளும் விறுவிருப்பாதான் போய்கிட்டு இருக்கு... எனக்கு முதல் ipl லில் இருந்தே டெக்கான் அணியை ரொம்ப பிடிக்கும் , காரணம் என் மனம் கவர்ந்த ரெண்டு பாட்ஸ்மென் கில்லி மற்றும் கிப்ஸ் அந்த அணியில் விளையாடுவது, டோனி இருக்கும் ஒரே காரணத்துக்காக சென்னை அணியை பிடிக்கவே செய்யாது ... டெக்கான் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று முன்னணியில் உள்ளனர்.... வேறு எதுவும் அந்த அணியை பற்றி நான் சொல்ல பயமாக உள்ளது ... நம்ம ராசி அப்படி .... (எனக்கு "தெரிந்த" ஒரு பெண்ணின் விருப்பதிற்காக எனக்கு விஜய்யை பிடிக்கும் என்று நான் அவளிடம் (பொய்)சொன்ன நாளில் இருந்து இன்று வரை விஜய் ஒரு படம் கூட ஹிட் கொடுக்க முடியவில்லை)...


முன்ன எல்லாம் மாணவர்களுக்குள்ள சண்ட வந்ததுனா அது கண்டிப்பா சட்ட கல்லூரியாதான் இருக்கும். அதுக்கு காரணம் நம்ம அரசியல் வியாதிகள், சட்ட கல்லூரி மாணவர்களை குறி வைத்து அவர்களை தங்கள் அரசியல் பணிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து வந்ததுதான்... சட்ட கல்லூரி மாணவர்கள் என்றால் கண்டிப்பா ஏதாவது ஒரு அரசியல் கட்சி சார்ந்தவராகத்தான் இருப்பார்... ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு அரசியல் வியாதிகளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தவுடன் அந்த சண்டைகள் எல்லாம் குறைந்து விட்டன...

இப்பொழுது அரசியல் வியாதிகள் தங்கள் ஆதாயத்திற்கு பொறியியல் கல்லூரி மாணவர்களை பயன்படுத்த நினைகின்றனர்... அதுவும் நிகர் நிலை பல்கலைகழகங்கள் விசயத்தில் அவர்கள் மாணவர்களை நிறையவே தூண்டி விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்... நான் கூற வந்த விஷயம் இது இல்லை..

நேற்று சன் செய்திகளில் பார்த்த ஒரு செய்தி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குள் நடந்த சண்டையில் நான்கு மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை அடித்து துவைத்து உள்ளனர்.... அவன் உடம்பெல்லாம் காயங்களுடன் குருதிபுனல் கமலை போல முகமெல்லாம் வீங்கி அழுது கொண்டு இருந்தான் ... எல்லா பள்ளிகளிலும் சிறுவர்களுக்குள் சண்டை வரத்தான் செய்யும் , அது அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்து கொள்ளப்படும்... அல்லது மிஞ்சி மிஞ்சி போனால் அவர்களின் வகுப்பு ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டு ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ suspend செய்யபட்டு பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் ..

ஆனால் இன்று பள்ளி மாணவர்களின் பிரச்சனை police station வந்து விட்டது அது மட்டும் இல்லாமல் ஊடகங்களிலும் அது முக்கிய செய்தியாக ஒளிபரப்பபடுகிறது... இந்த பிரச்சனையின் காரணமாக சில மாணவர்களின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாம் ... எல்லாம் கலி காலம்... இன்னும் கொஞ்ச நாளுல LKG பெண்ணின் மீது திராவகம் ஊற்றிய LKG பையன் கைது!! தன் காதலை ஏற்க மறுத்ததால் பயங்கரம்னு!!! செய்து வாசிப்பாங்க நாமளும் அத கேட்டுகிட்டு டீவீயில துள்ளுவதோ இளமையோ , ரேனிகுண்டாவோ பாத்து கிட்டு இருப்போம் .. அதுக்கெல்லாம் இதுவும் ஒரு காரணம்னு யோசிக்க தெரியாமலேயே....

(புடிச்சிருந்தா வோட்டு போடுங்க....பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க)

LinkWithin

Related Posts with Thumbnails