Followers

Copyright

QRCode
Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Thursday, March 31, 2011

இந்தியா vs பாக்கிஸ்தான்- போட்டோ கமெண்ட்ஸ்


சனிக்கிழமை திரும்பபோவது 1983 ஆ? இல்லை 2003 ஆ? பொறுத்திருந்து பார்ப்போம் ...

Friday, January 21, 2011

ராஜாவின் பார்வை : நிறைய கிரிக்கெட், கொஞ்சம் சினிமா


கிரிக்கெட் சினிமா



உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் ஒருமாதத்திர்க்கும் குறைவான நாட்களே இருக்கிறது .. எல்லா நாட்டு அணிகளும் தங்கள் அணி வீரர்களை அறிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்... இந்த மாதம் முழுவதும்  எல்லா முதல்நிலை அணிகளும் இன்னொரு முதல்நிலை அணியுடன் மோதிகொண்டு   இருக்கிறது, உலக கோப்பையின் முன்னோட்டமாக  தங்கள் அணியின் திறனை பரிசோதித்து பார்க்க நல்ல வாய்ப்பாக இதை அவர்கள் நினைக்கின்றனர் .. ( இந்தியா தென் ஆபிரிக்கா , இங்கிலாந்து ஆஸ்ட்ரேலியா , பாகிஸ்தான் நியூசிலாந்து என்று கிட்டத்தட்ட ஒரு pre world cup போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது)  ... இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எப்படி விளையாடி இருக்கிறது என்பதை கொண்டு நாம்  உலக கோப்பையில் என்ன நடக்கும் என்பதை  கிட்டத்தட்ட கணித்து விடலாம்...

முதலில் இந்தியா தென் ஆஃப்ரிகா ஆட்டம் .... இந்த டூர் ஆரம்பத்தில் இந்தியா மரண அடி வாங்கினாலும் , பின்னர் விஸ்வரூபம் எடுத்து தென் ஆஃப்ரிகா அணியினரை கதிகலங்க வைத்து கொண்டு இருக்கிறது .... உலக கோப்பையை பொறுத்த வரை ஒரு அணியின் சமீபத்திய டெஸ்ட் வெற்றிகள்  பெரிய இம்பாக்ட் உருவாக்க போவதில்லை .. அந்த அணியின் தற்போதைய ஒருநாள் ஆட்டதிறனே அந்த அணியின் உலக கோப்பை வாய்ப்பை முடிவு செய்யும் ... இதில் இந்த இரண்டு அணிகளை கவனித்து பார்த்தால் இந்திய அணியின் கையே சற்று ஓங்கி இருக்கிறது... முதல் ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்து இருந்தாலும் , அடுத்த இரண்டு ஆட்டங்களில் திரில் வெற்றியை ருசித்து இருக்கிறது ...முதல் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசம் இரண்டாம் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசம்  என்று வெற்றி வித்தியாசங்கள் மிக குறைவாகவே இருப்பதால் இரண்டு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக உங்களுக்கு தெரியலாம் , ஆனால் இரண்டு அணிகளையும் வேறுபடுத்துவது போட்டி நடக்கும் இடம் மற்றும் அதில் ஆடும் அணி வீரர்கள் ...

நாங்க ஏன் நம்பர் 1 :



போட்டி நடப்பது தென் ஆஃப்ரிகா , அங்கு இருக்கும் ஆடுகளங்கள் இப்பொழுது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்படி அமைக்க பட்டு உள்ளன ... முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டேயின் மற்றும் திஸோட்சோப் வீசிய பந்துகள் எகிறிய எகிறில் இருந்தே அதை அறிந்து கொள்ளலாம்... அதில் இந்தியா படு தோல்வி அடைந்தது .. ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் மைதானம் சுழல்  பந்து வீச்சிர்க்கு ஸலாம் போட ஆரம்பித்தது... ஹர்பஜனின் சுழலை சமாளிக்க முடியாமல் தென் ஆஃப்ரிகா சறுக்கியது ... இதுதான் உலககோப்பையில் இரு அணிகளுக்கும் இருக்க போகும் பெரிய வித்தியாசமே.. சொந்த மைதானத்திலேயே இந்திய வீரர்களின் ஸ்பின் பௌலிங்கை சமாளிக்க தினரும் அவர்கள் ஸிபின்னுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்திய பிட்ச்களில் ஜொலிப்பது கஷ்டமே ... இந்திய அணியினருக்கு அவர்கள் தென் ஆஃப்ரிகா மைதானங்களில்  பந்து வீச்சில்  கலக்கியது  ஆறுதலான விஷயம் .. குறிப்பாக ஜாகீர் கான் பந்து வீச்சில் ஃபார்ம்முக்கு திரும்பி இருப்பது தோனிக்கு பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும்...


அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் , இந்த தொடரில் தென் ஆஃப்ரிகா தன்னுடய முழு பலத்தையும் காட்டி விளையாடி இருக்கிறது , ஆனால் இந்திய அணியில் முன்னணி துடுப்பாட்டக்காரர்கள் பாதி பேர் விளையாடவில்லை .. குறிப்பாக  சேவாக் , கம்பீர் , டெண்டுல்கர் என்று அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் யாரும் களமிறங்கவில்லை ... குறிப்பாக சொல்ல வேண்டும் என்றாள் தென் ஆஃப்ரிகாவின் முதல் நிலை அணியை இந்தியாவின் இரண்டாம் நிலை அணி திணறடித்து கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் ... இப்பொழுது தெரிந்திர்க்கும் அவர்களுக்கு ஏன் இந்திய அணி நம்பர் ஒன் என்று சொல்லப்படுகிறது என்று ...



ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது தம்பி :

இந்தியாவை போல இந்த மாதம் ஆட்டத்தில் கலக்கி கொண்டு இருக்கும் இன்னொரு அணி இங்கிலாந்து ... ஆஸ்ட்ரேலியா மண்ணிலேயே பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என்று எல்லா துறையிலும் அவர்களை விட பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது ... ஆனால் அவர்களால் இந்திய அணியை ஜெயிக்க முடியுமா? அப்படி ஒரு போட்டியில் யார் ஜெயிப்பார்கள்? இதுதான் இன்று கிரிக்கெட் உலகில் மில்லியன் டாலர் கேள்வி... இதற்க்கு ஒரு அதிமேதாவி இப்பொழுது இருக்கும் இங்கிலாந்து அணி ஒரு வாரம் முழுவதும் விளையாண்டாலும் அந்த ஏழு ஆட்டங்களிலும் இந்தியாவை ஜெயிக்கும் பலம் வாய்ந்தது என்று திருவாய் மலர்ந்து இருக்கிறது .. 2003 உலக கோப்பையில் இதே போல ஒரு ஆதி மேதாவியின் வாய்  சச்சின் ஒன்றும் பெரிய பேட்ஸ்மென் கிடையாது அவரை தன்னால் எந்த ஆட்டத்திலும் அவுட் ஆக்க முடியும் என்று திருவாய் மலர்ந்து சச்சின் அடித்த அடியில் வாயில் புண்ணோடு ஊர் போயி சேர்ந்தது .. அவர்கள்  இதே போல நிறைய பேச வேண்டும் என்பதே என் ஆசை ... கண்டிப்பாக பேசிய பேச்சுக்கு ஏற்றவாறு அடி கிடைக்கும் ...


கவுத்திராதீங்கப்பு :


இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை ஒரு பெரிய வாய்ப்பு ... 2003 உலக கோப்பையில் அணி எந்த ஃபார்மில் இருந்ததோ அதைவிட அருமையான ஃபார்மில் இப்பொழுது இருக்கிறது ... 2003 இல் நமக்கு வில்லனாக இருந்த ஆஸ்ட்ரேலியா இப்பொழுது பலமிழந்து ஒரு காமெடி பீஸாக காட்சி தருகிறது .. சமீப காலங்களில் மற்ற எல்லா அணியினரையும் நாம் மண்ணை கவ்வ வைத்திருக்கிறோம் (வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான் தவிர...  அவர்களுடன் நீண்ட காலமாக விளையாடவே இல்லை ஆனால் அவர்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பார்மில் இல்லை) எனவே இது நமக்கு நல்ல வாய்ப்பு ... 2007 போல  திடீரென்று எல்லாரும் பார்ம் இழந்து கவுத்திராதீங்கப்பு...


இந்தியாவை தவிர்த்து பார்த்தால் இந்த உலக கோப்பையை வாங்கும் தகுதியுடன் தற்போது இருக்கும் அணிகள் இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிகா ... ஆனால் இந்த இரண்டு அணிகளுமே ஸ்பின்னில் ஒழுங்காக விளையாட தெரியாத அணிகள் .. இந்திய மைதானங்களில் அவர்களால் இந்தியாவை வெல்ல இயலுமா என்று தெரியவில்லை .. ஆனால் ஆஸ்ட்ரேலியாவையும் ஒதுக்கி வைக்க முடியாது .. எப்பொழுது வேண்டுமானாலும் முழு திறனுடன் மீண்டு வரும் அணி அது ... இதை தவிர்த்து இந்திய ஆடுகளங்களில் இந்தியாவை வெல்லும் திறன் படைத்தவை என்று பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்ரீலங்காவை கூறலாம் ... ஆனால் இரண்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சமீபத்தில் விளையாடவில்லை ... ஆனால் எது வேண்டுமானாலும் நடக்கும் கிரிக்கெட்டில் .. திடீரென்று பங்களாதேஷ் கூட கோப்பையை வெல்லலாம்... (1983 ஞாபகம் வருகிறது .. அன்று இந்திய அணி அப்படிதானே இருந்தது )  அதானே அந்த விளையாட்டின் சுவாரஷ்யமே ....  


சினிமா :

மாங்காத்தா பட ஸ்டில்ஸ்களில் தல நரைத்த முடியுடன் காட்சி தருகிறார் .. பார்க்க படம்


சில ரசிகர்கள் இதை ரசித்தாலும் சில ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை ...என்னை கேட்டால் படம் வெளிவரும் வரை இதை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றுதான் சொல்லுவேன் ... தல ஒரு விஷயம் செய்தால் அது சினிமாவில் ஒரு ஃபேஷன் போல எல்லாராலும் பின்பற்றபடுகிறது... இன்று போல பெரிய பெரிய நடிகர்கள் தொடங்கி நண்டு  சுண்டு நடிகனெல்லாம் படத்தில் கோட்டு சூட்டு போட்டு நடிப்பது அதையே காட்டுகிறது ... யாருக்கு தெரியும் நாளைக்கு இதுவும் ஒரு பெரிய ஃபேஷன் ஆகலாம்... தல பவர் அப்படி ... என்ன ஓவரா பேசுறேண்ணு நினைக்கிறீங்களா? அப்ப இந்த மேட்டர படியுங்கள்



யார் வசூல் சக்கரவர்த்தி?
எங்க படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறாங்க... சின்ன கொழந்தைங்க எல்லாருக்கும் பிடிச்ச நடிகர் எங்காளுதான்... எங்காலு டான்ஸ் ஒண்ணு போதும் படம் ஓட .. எங்க பாட்டு எப்பவுமே சூப்பர் ஹிட்டுதான்... நாங்கதான் வசூல் சக்கரவர்த்திகள் ... என் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் ம்யூசிக் போடனும் ... பெரிய இயக்குனர்கள் படத்துல மட்டும்தான் நடிப்பேன் ... நொடிக்கு நூறு முறை விளம்பரங்கள் தரனும் ...இப்படி என்னணவோ சொல்லிகிட்டு இருந்தவணுக நடிச்ச எந்த படமும் இந்த லிஸ்டில் கிடையாது ...

குடும்ப ஆடியன்ஸ் அவ்வளவாக கிடையாது .. கொழந்தைகள் ரசிக்கும்படி இன்னமும் படம் கொடுக்கவில்லை ... நடனம் சுத்தமாக தெரியாது ... பாட்டு நல்லா இருந்தாலும் ஊடகங்கள் புறக்கணித்து விடும்... படங்களுக்கு எந்த விளம்பரமும் கிடையாது ... இப்படி எந்த விஷயமும் இல்லாமல் ரசிகர்கள் பலம் ஒன்றை மட்டுமே  நம்பி இருக்கும் ஒருவரின்  படங்கள் இரண்டு இந்த லிஸ்டில் இடம் பிடித்து உள்ளன ..

காரணம் சிம்ப்ளி ஒரே வார்த்தை அது தல ... இதில் வரலாறு பெரிய ஆச்சரியம் நொடிக்கு நூறு முறை விளம்பரம் போடப்படும் படங்கள் வசூலிக்க முடியாத தொகையை குறைந்த பட்சம் பேப்பரில்கூட விளம்பரம் கொடுக்கபடாத ஒரு படம் வசூலித்திருக்கிறது ... இந்த படத்திர்க்கு நூறாவது நாள் விளம்பரம் தூத்துக்குடி ரசிகர்களால் தினத்தந்தி பேப்பரில் போடபட்டது ... தூத்துக்குடியிலும் நாகர்கோவிலிலும் படம் நூறு நாட்கள் ஓடி இருந்தது ... இப்படி தயாரிப்பாளர் மொத்தமாய் கைகழுவிய படம் .. ஆனால் வசூல் சாதனை ... தரமான விசயங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறது வரலாறு... வசூல் சக்கரவர்தி என்று தங்களுக்கு தாங்களே முடிசூட்டி கொண்டவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?


இன்னொன்று பில்லா .. நான்தான் எப்பவும் kinf of opening என்று அஜித் அழுத்தமாய் தன் போட்டியாளர்களுக்கு உணர்த்திய படம் .. அருப்புக்கோட்டை தமிழ்மணி திரை அரங்கில் இதற்க்கு அமைந்த ஒபேணிங்க் மாஸ் இதுவரை வேறு எந்த படத்திர்க்கும் நான் கண்டதில்லை ... டிக்கெட் கிடைத்து உள்ள போன கூட்டத்தை விட டிக்கெட் கிடைக்காமல் வெளியேறிய கூட்டம் அதிகம் ... ஒரு மணிநேரத்திர்க்கு தியேட்டர் அமைந்திருந்த விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் பேருந்துகள் செல்ல முடியவில்லை ... தல இதை போன்ற தான் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படங்களாய் தெரிவு செய்து நடிக்க வேண்டும் என்பதே ஒரு ரசிகனாய் என்னுடய ஆசை... 

Monday, January 10, 2011

அசிங்கபட்ட கங்குலி , சந்தோஷ நிட்டினி ( வாழ்க BCCI , வளர்க அதன் புகழ்)

நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் பற்றி எரிய ஆரம்பிச்சாச்சி ... நானும்  கிரிக்கெட் பற்றி பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சி .... இப்பதான் ஐபிஎல் ஏலம் முடிஞ்சதாம் , பசங்க சொன்னாணுக , அண்ணே நம்ம தானை தலைவன் , கொல்கத்தா சிங்கம் கங்குலி அவர்களை யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை என்று , மனசுக்குள்ள பிளஷ்பேக் ஒட்டி பாத்தேன் ,  பத்து டையரும் பஞ்சராக்கி கெடக்க , டெண்டுல்கர்கிற  ஒத்த டையர வச்சி ஓடிக்கிட்டு இருந்த இந்தியன் டீம , தன்னோட முதல் டெஸ்ட் மேச்லயே லார்ட்ஸ்  அரங்கத்தில் அந்த நாட்டிற்க்கு எதிராகவே சதம் அடித்து தோற்க  வேண்டிய ஆட்டத்தை வெற்றி பெற வைத்து அணிக்குள் சிங்கம் போல் நுழைந்தவர் (ரஜினி பட அறிமுக காட்சி போல இருந்தது அவரின் வருகை ) , சரியான கூட்டணி கிடைக்காமல் தனியாக போராடிகொண்டு இருந்த சச்சினுக்கு சிறந்த கம்பெனியாக இருந்தவர்... சச்சினே அப்பொழுது பேட்டிகளில் கூறுவார் கங்குலி வந்த பின்னர் தன்னுடய சுமை பாதி குறைந்து விட்டது , பதட்டம் இல்லாமல் விளையாட முடிந்தது என்று



தன்னுடய போராடும் குணத்தினால் கூடிய விரைவிலேயே அணியின் தலைவனாகவும் உயர்ந்தார் ... அதர்க்கு பிறகுதான் ஐசியுவில் மரண படுக்கையில் இருந்த இந்திய அணி வெற்றிகளை அதிரடியாக குவிக்க தொடங்கியது , அதர்க்கு முக்கிய காரணம் இவரின் வழிநடத்தலும் , பல புதுமுகங்களை அவர்களின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து அறிமுகபடுத்தியதும் , அவர்களை  திறமையாக பயன்படுத்துயதும்.. அவரின் வழிநடத்துதலில் இந்திய ரசிகர்களின் கனவான  உலககோப்பையின் மிக அருகில் அதாவது இறுதி போட்டி வரை முன்னேறியது .... அது ஒரு தலைவனாக கங்குலி அணிக்கு , அதன் ரசிகர்களுக்கு தேடி தந்த பெருமை ...

இப்படி தலைவனாக அவர் செய்த சாதனைகளை விட  ஒரு துடுப்பாட்டக்காரனாகவும் பத்து வீச்சாளராகவும்  அவர் செய்த சாதனைகள் அதிகம், டெஸ்ட் ஆட்டத்தில் முதல் போட்டியில் சதம் , அதுவும் லர்ட்ஸ் மைதானத்தில் , இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் அவர்தான் , முதல் ஆட்டத்தில் அந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரரும் அவர்தான்(133)...

1997 சகாரா கோப்பை அவருக்கு மிக பெரிய பெயரை பெற்று தந்தது .. ஐந்து ஆட்டங்களில் தொடர்ந்து நான்கு ஆட்டங்களை இந்தியா வென்றது ... அந்த நான்கு ஆட்டங்களிலும் அவர்தான் man of the match …. அதில் ஒரு ஆட்டத்தில் அவர் 16 ஓட்டங்களை மட்டுமே விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்... அவரை சிறந்த பந்து வீச்சாளராகவும் அறிய செய்த போட்டி அது...


டெண்டுல்கரும் இவரும் இணையாக  8277 ஓட்டங்களை குவித்துள்ளனர்  ... இது ஒரு உலக சாதனை (first biggest partnership runs )... டெண்டுல்கருடன் மட்டும் இல்லை டிராவிட்டுடனும் இணைந்து இதுவரை 4363 ஓட்டங்களை குவித்துள்ளார்... இது ஐந்தாவது  பெரிய partnership சாதனை ஆகும் ...

1999 உலக கோப்பையில் இவரும் டிராவிட்டும் இணைந்து 318 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்கள் , இது ஒரு உலக கோப்பை சாதனை , வேறு எந்த உலக கோப்பை போட்டிகளிலும் எந்த இணையும் இதைவிட அதிக ரன் எடுக்கவில்லை ...

சச்சினுக்கு பிறகு ஒரு நாள் ஆட்டங்களில் 10,000 ஓட்டங்களை கடந்த ஒரே இந்திய வீரர் இவர் மட்டுமே ... உலக அளவில் ஐந்தாவது ஆளாக இந்த சாதனையை செய்துள்ளார்...

புகழ் பெற்ற விஸ்டன் புஸ்தகம் வெளியிட்ட  கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்கள் வரிசையில் ஆறாவது இடம் இவருக்கு ... இவருக்கு முன்னாள் இருக்கும் ஒரே ஒரு இந்திய வீரர் சச்சின் மட்டுமே ...


சச்சினுக்கு அடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள இந்திய வீரர் இவர் மட்டுமே (22 சதங்கள்),

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் அவரின் சாதனை பட்டியலை ... சச்சின் என்று ஒருவரை நீக்கி விட்டு பார்த்தால் இந்திய அணியில் அதிக சாதனைகளின் சொந்தக்காரர் இவர்தான் ... இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த இரண்டாவது வீரர் என்று அவரை கூறலாம் ... ஆனால் அவரை வழி அனுப்பி வைத்த விதம் மிக கொடுமையானது .... அவர் வளர்த்து விட்ட ஆட்களே அவரை அணியை விட்டு துரத்தினார்கள் .. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை ... 2008ம் ஆண்டு நீண்ட இடைவேளைக்கு பின்னர் அணியில் இடம் பிடித்தார் ... எதிரணி தென்னாப்பிரிக்கா... அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே சதம் ... அவரை குறை சொன்னவர்களுக்கு எல்லாம் சரியான பதிலடி கொடுத்தார் .. ஆனால் அதன் பிறகும் ஏன்? எதற்க்கு? என்று சொல்லபடாமலேயே அணியை விட்டு தூக்கி எறியபட்டார்... அதன் பிறகு நல்ல பார்மில் இருந்தும் அணிக்குள் இருந்த சில அரசியல் காரணங்களுக்காய் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவே இல்லை .. பொறுத்து பொறுத்து பார்த்த அவர் வேறு வழி இல்லாமல் ஓய்வு முடிவை எடுத்தார் ... ஆனால் அவர் ஓய்வை இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை ஏதோ நான்கு ஆட்டம் ஆடிவிட்டு ஓய்வு பெற்ற ஒரு நாளாம்தர வீரனை போல அவரை விடை கொடுத்து அனுப்பியது இந்தியா... அது என்னை போன்ற அவரின் ரசிகர்களுக்கு பெரிய வேதனை ... ( இவர் ஸ்ரீலங்காவிற்க்கோ இல்லை பாகிஸ்தான் அணியிலோ இடம்பெற்று இவ்வளவு சாதனைகளை செய்திருந்தால் அவர்தான் அந்நாட்டின் சிறந்த வீரானாய் இருந்திருப்பார் .... அதற்குரிய மரியாதையும் அவருக்கு இருந்திருக்கும் .... இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு ... )


இன்று அதைவிட பெரிய அசிங்கத்தை அவருக்கு கொடுத்து விட்டது நம் அணி ... IPL போட்டிகளில் அவரை குறைந்தபட்ச ஏல தொகை கொடுத்து எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை ... இதில் அவரின் தவறும் இருக்கிறது ஏன்றாலும் , பணம் என்ற விசயத்தின் முன்னால் ஒரு சிறந்த வீரன் , அணிக்காக அதிகம் உழைத்த ஒருவன் அவமானபடுத்த பட்டு விட்டான் என்றே எடுத்து கொள்ள தோன்றுகிறது... இதுதான் அவரின் சாதனைகளுக்கு நம் அணி தரும் மரியாதையா? அவர் அணிக்காக செய்த விசயங்களை மறந்துவிட்டு காசுக்காக அவரை அவமானபடுத்தி விட்டீர்களே ...இதை அவர் எப்படி எடுத்துக்கொண்டாரோ இல்லையோ எனக்கு தெரியவில்லை , ஆனால் அவர் அணிக்காக ஒவ்வொருமுறை நன்றாக ஆடிய பொழுதெல்லாம் பெருமையாகவும் சந்தோசமாகவும் பார்த்து கொண்டு இருந்த ஒவ்வொரு இந்திய ரசிகனும் கண்டிப்பா வருத்தபடுவான் ...   நீங்கள் நினைத்திருந்தாள் அவரை ஏதாவது ஒரு அணியில் இடம்பெற செய்து இருந்திருக்கலாம் ... இன்று அவரால் பெரிய லாபம் உங்களுக்கு இல்லை என்றாலும் அவரின் பழைய சாதனைகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவாது இதை நீங்கள் செய்து இருக்கலாம் ... அவரை விட உங்களுக்கு அந்த ஐந்து கோடி பணம்தானே பெரியதாக தெரிகிறது ... விளையாட்டை பணம் காய்க்கும் மரமாக நீங்கள் மாற்றி விட்டீர்கள் , ஆனால் ரசிகர்கள் நாங்கள் அப்படி இல்லை ... அது எங்களை பொறுத்தவரை நாட்டின் கவுரவம் ... அதில் இந்தியாவை தலை நிமிர செய்த அனைவருமே நம் நாட்டின் பெருமையான சின்னங்களே... காசுக்காக அவர்களை அவமானபடுத்தாதீர்கள் ....


கடைசியாக  கங்குலிக்கு ரசிகனாக ஒரு விண்ணப்பம் , தல தயவு செய்து ஒதுங்கி விடுங்கள் .. உங்கள் மேல் தவறே  கிடையாது .. சென்ற IPL போட்டிகளில் நீங்கள் நன்றாகவே விளையாடி இருந்தீர்கள் ... (14 ஆட்டங்கள் 493 ரன்) ... உங்களை விட குறைந்த ரன் குவித்தவர்கள் எல்லாம் பல கோடிகளுக்கு  எடுக்கபட நல்ல பார்மில் இருந்தும் நீங்கள் ஒதுக்கபடுகிறீர்கள்..... இதற்க்கு மேலும் நீங்கள் காயப்பட  வேண்டாம் .... கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை ... 

கடைசியாக பிசிசிஐக்கு , உலக அளவில் பெரிய பணக்கார அணி நீங்கள்தானாம் ... வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க ... ஆனால் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் தயவு செய்து பணதிர்க்காக கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு இருக்கும் மரியாதையை  அழித்து விடாதீர்கள் ...


சந்தோஷ நீடினீ
நேற்று தென் ஆபிரிக்கா அணி நிர்வாகம் நீட்டினிக்கு கொடுத்த மரியாதையை பார்த்த பொழுது சந்தோஷமாக இருந்தது ... நான் நேற்று நெட்டில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் அந்த போட்டியை பார்த்தேன் ... அதனால் தென் ஆபிரிக்க நாட்டு ஒளிபரப்பில் காண வாய்ப்பு கிடைத்தது ... போட்டி முழுவதும் அவர்கள் ஒளிபரப்பிய விளம்பரங்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்... விளம்பரங்கள் மிகவும் குறைவாக ஒளிபரப்பபட்டன ... ஆனால் நம் நாட்டு ஒளிபரப்பில் பார்க்கும் போது ஏதோ விளம்பர கம்பெனிகள் அவர்கள் விளம்பரங்கள் ஒளிபரப்பிய நேரம் போக மீதி நேரத்தில் போனால் போகிறது என்று போட்டியை ஒளிபரப்பியது போல இருந்தது ... போட்டியை ரசிக்கும் மனநிலையை இழந்து  ஏதோ விளம்பர சந்தைக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுப்பதை போன்று எனக்கு தோன்றும் ...

nitini விடை பெரும் பொழுது மிக சந்தோஷமாக இருந்தார் ... அங்கே பணத்தை விட கிரிக்கெட்டுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள் .. அதனால்தான் அவர்களால் சந்தோஷமாக விடை பெற முடிகிறது .. ஆனால் இங்கே விளையாட்டை விட பணத்திர்க்குதானே அதிக மரியாதை ... உன்னால் லாபம் இல்லை என்றாள் நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் உனக்கு மரியாதை கிடையாது என்று கங்குலி விஷயத்தில் மறைமுகமாக  சொல்லி இருக்கிறார்கள் ...வாழ்க BCCI , வளர்க அதன்  புகழ்     



LinkWithin

Related Posts with Thumbnails