மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்
இந்த தலைப்பில் இப்ப பதிவுலகத்தில்
நிறைய பதிவுகள் தொடர்ந்து வந்துகிட்டு இருக்கு ... அது ஒரு தொடர்பதிவாம் , யார்வேணும்னாலும் தொடரலாமாம் ... வழக்கம் போல யாருமே
என்னை எழுத அழைக்கவில்லை என்றாலும் என்னை நானே ஒரு கட்டாயத்தில் பேரில் (அது என்னவென்பதை பதிவின் கடைசியில் சொல்கிறேன்) அழைத்து கொண்டு தொடரில் இணைகிறேன் ....
மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்
என்பதற்க்கு எனக்கு சரியாக அர்த்தம் புரியவில்லை
, இருந்தாலும் என்னுடைய சிற்றறிவுக்கு
எட்டிய வரையில் ஏதோ புரிந்து கொண்டு எழுதி
இருக்கிறேன் , ஏதாவது தவறு இருந்தால்
மன்னிக்கவும் குறிப்பாக இளையதளபதியின் ரசிககண்மணிகள் பதிவை படித்து விட்டு பொங்க
வேண்டாம் என்று கேட்டுகொல்லபடுகிறார்கள்...
டவுசர் போட்டுக்கொண்டு சுற்றிய காலகட்டங்களில் பல விக்ரமன் படங்களை பார்த்து
கண்கலங்கி இருக்கிறேன் ... பூவே உனக்காக , வானத்தை போல , உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று அது ஒரு பெரிய லிஸ்ட் ...இந்த படங்களை எல்லாம் அப்பொழுதே தியேட்டரில் சென்று பார்த்து அழும் வாய்ப்பு என் இரண்டு சித்திகளின் மூலம் கிடைத்தது
, அந்த
வயதில் அந்த படங்கள் எல்லாம் நெஞ்சில் ஒரு பாரத்தை ஏற்றி வைத்ததை போல உணர்வை கொடுத்த படங்கள் ... ஆனால் இப்பொழுது அந்த படங்களை
பார்க்கும் பொழுது ஹீரோ பேசும் மொக்கை சென்டிமெண்ட் வசனங்களை கேட்டால் சிரித்து
சிரித்து வயிறு வலிதான் வருகிறது ... அதனால் இந்த படங்களை எல்லாம் இந்த லிஸ்டில் இருந்து reject செய்ய வேண்டிய கட்டாயம் ...
அடுத்து கல்லூரி சென்ற பின்னர் , சில அதிமேதாவி நண்பர்கள் மூலம் குணா
, அன்பே
சிவம் போன்ற உலக படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ... அந்த படங்களின் கிளைமாக்ஸ் அப்பொழுது
என் மனதை கசக்கி பிழிந்து அடித்து
துவைத்து சாறு பிழிந்திருந்தாலும்
, இப்பொழுது அவை எல்லாம் ஏதோ ஒரு வேற்று
மொழி படங்களின் உல்டா என்று தெரிந்த பின்னர் அந்த படங்களை பற்றியும் எழுத விருப்பம்
இல்லை ....
வேறு எந்த படத்தை பற்றிதான் எழுதுவது ... என் மனதை கனக்க வைக்கும் அளவுக்கு சொந்தமாக யோசித்து படம் எடுக்கும் திறமைசாலி இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் கிடையாதா ? அதில் என் மனதை பிழியும் அளவுக்கு நடிக்க தெரிந்த பிறவி கலைஞன் யாரும் நம் மண்ணில் பிறக்கவில்லையா? என்று
மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு யோசித்தபொழுதுதான்
சரேலென்று ஒரு கணம் அந்த படம் என் மனதில் மின்னி தோன்றி மறைந்தது ... எப்படி மறந்தேன்
அந்த காவியத்தை , அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சியை , மறக்க கூடிய கிளைமாக்ஸா அது ...
இதோ கல்நெஞ்சக்காரன் என்று என்னை சுற்றி இருக்கும் எல்லோராலும் வசைபாடபடும் என்
நெஞ்சயே வலிக்க வைத்த ஸாரி கனக்க வைத்த அந்த கிளைமாக்ஸ் இளையதளபதி நடித்த பவர் ஃபுல் “வில்லு” பட கிளைமாக்ஸ்...
தாடியை நன்கு சிரைத்து விட்டு மீசையை ஒட்ட வெட்டி
விட்டு நம் தளபதியை கம்பீரமான ராணுவீரனாக ராணுவ உடையில் காட்டிய பொழுது எனக்கு முதல் அட்டாக் இதயத்தில் ... என் நெஞ்சம் கனக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான் ... நல்ல வேளை இடைவேளையில் வாங்கி வைத்திருந்த தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் தண்ணீர்
இருந்ததால் அதை குடித்து என்னை ஆசுவாசபடுத்தி கொண்டேன் ... பின்னால்
இதைவிட கொடுமைகளை எல்லாம் திரையில் காட்ட போகிறார்கள் என்பதை அறியாமல் தொடர்ந்து படம்
பார்த்து கொண்டிருந்தேன் ... ராணுவ தளவாடங்களை எதிரி நாட்டுக்கு கடத்தி விற்கும்
வில்லன்களோடு "மேஜர் தளபதி" மரத்திர்க்கு
மரம் தாவி தாவி சண்டை போட்டு கடைசியில் ஜெய் ஹிந்த்(நேதாஜிக்கு வந்த சோதனை) சொல்லிக்கொண்டே
சாகும் பொழுது இங்கு எனக்கு மூளையில் சாவு மணி கேட்டது...எழுந்து
ஓடிவிடலாம் என்று பார்த்தால் தியேட்டரில் கதவை மூடி விட்டார்கள். வேறு வழி இல்லாமல்
இதை எல்லாம் தாங்கி கொண்டு உக்காந்திருந்தால் கடைசியில் வில்லன்கள் எல்லாம் மகன் தளபதியை அடித்து
துவைத்து குழி தோண்டி புதைத்து விட , அப்பாடா "தொல்லை தீர்ந்தது படம் முடிந்தது" என்று
நான் சந்தோஷமாக ஸீட்டை விட்டு எழுந்திருக்க நினைக்கையில் , தியேட்டர் முழுவதும் ஸர் புர் என்று புயல் வீசும் சத்தம்
, இது என்னடா புது சோதனை என்று நிமிர்ந்து
உக்கார எத்தனிக்கையில் நியூட்டனில் புவி ஈர்ப்பு விசையை எல்லாம் பொய்யாக்கி விட்டு
தளபதியை புதைத்திருந்த குழியில் டன் கணக்கில் இருக்கும் மண் எல்லாம் அந்த சின்ன சூறாவழியில் குழியை விட்டு மேழெலும்ப தளபதி சட்டையில் கொஞ்சம் கூட அழுக்கு ஒட்டாமல் குழியில் இருந்து எழுந்து வந்தார் ...
இதை பார்த்த எனக்கு நெஞ்சில் வலது பக்கம் இடது பக்கம் என்று எல்லாபக்கமும் யாரோ ஈட்டியால் குத்தியதை போல
கனத்தது ... இதற்க்கு மேல் இங்கு உக்கார்ந்திருந்தால் நம்மை குழியில் தள்ளி விடுவார்கள்
என்று பயந்து , தியேட்டர் வாட்ச்மேன் காலில் விழுந்து கதவை திறக்க சொல்லி ஓடினேன் ஓடினேன் எங்கள் ஊரின் எல்லையை நோக்கி ஓடினேன் ... அங்குதான்
நெஞ்சு வலிக்கு சிகிச்சை தரும் மருத்துவமனை இருக்கிறது , அங்கு
போனவுடன் டாக்டரிடம் ஸார் வில்லு படம் பார்த்தேன் என்று சொல்லி
வாய் மூடவில்லை அவர் இதுக்கு மேல நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம் , நீங்க ரொம்ப ரொம்ப அபாயகரமான
நிலமையில இருக்கீங்க என்று என்னை உடனடியாக
ஐசியுவில் படுக்க வைத்து விட்டார் ... பிறகுதான் தெரிந்தது அந்த
ஐசியுவில் இருக்கும் எல்லாருமே வில்லு கிளைமாக்ஸ் பார்த்து விட்டு நெஞ்சு வலி வந்து அங்கு படுத்து
கிடக்கிறார்கள் என்று ...
இதை போல படம் பார்க்க
வந்த எல்லார் நெஞ்சையும் கனக்க வைத்து அவர்களை
ஐசியுவில் படுக்க வைத்த இந்த காவியத்தை பற்றி யாருமே இந்த தொடர் பதிவில் எழுதவில்லை என்பதால்தான்
வேறு வழி இல்லாமல் யாருமே கூப்பிடாமல் இந்த தொடர்பதிவை தொடர வேண்டிய கட்டாயம் எனக்கு
நேர்ந்தது .. உங்களுக்கும் இதை போன்ற நெஞ்சை கனக்க வைத்த படங்கள் இருந்தால் தாராளமாய்
இதை தொடரலாம் ....
கொசுறு :
காப்பி நம்பர் 2
கொசுறு :
அசராம அடிக்கிறதுண்ணா இதுதானா?
காப்பி நம்பர் 1
ஆடு நனையுதே என்று ஓநாய்கள் அழுகின்றன !
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
எனக்கு ஹார்ட் அட்டாக் அதுக்கு முன்னாடி போக்கிரியிலேயே வந்துவிட்டது.
ReplyDeleteajith vijay rendu perume waste
ReplyDeletebut i like ajith why... cute shalini ajith-kku kidaichu irukkanga
mattha padi ajith waste thaan
ஐயோ.....
ReplyDeleteஇந்த vaayuputhra வில்லு படத்த ரெண்டு,மூணு தடவ பாத்து இருக்கான் போலடா.
டவாலி மாதிரி ஒரே விசயத்த 2 ,,3 .தடவ சொல்லறான். முத்துரதுக்குள்ள ..
சீக்கிரமா டொக்டர் விஜய் கிட்ட அனுப்புங்க......
நண்பா எல்லாமே ஒரு ஜாலி காக தானே....இதுக்கு ஏன் இந்த kola வெறி? கூல்...கூல்.....
கதையை copy அடிக்கிறது தெரியும். போஸ்டர் ஐ, costume ஐ copy அடிக்கிறது புதுசு. இது தான் பரிணாம வளர்ச்சியோ?
ReplyDeleteby the way, உங்கட பதிவு முதல் தரம் பார்க்கிறேன். இவ்வளவு நாளும் பின்தொடரவில்லையே என்று கவலையாக இருந்தது. அட்டகாசம்!
// ஆடு நனையுதே என்று ஓநாய்கள் அழுகின்றன !
ReplyDeleteநீங்க ஓநாய் என்று சொல்லுவது அவரைத்தானே ..
@ vayuputhra
ReplyDeleteபெரிய காமெடி பீஸ் ஸார் நீங்க
@ முன்பனிக்காலம்
ReplyDeleteநன்றி நண்பரே
@ பாலா
ReplyDeleteஅப்படி பாத்தா எனக்கு நாளைய தீர்ப்புளயே முதல் அட்டாக் வந்திருச்சி
@ vivek
ReplyDeleteவிடுங்க பாஸ் ... வில்லு , வேட்டைக்காரன் , சுறா மூணு படத்தையும் ஒரே நாள் பார்த்திருப்பாரு போல ...
Sorry vaayuputhra ennoda friend than villu padam paathathula irunthu mental aagitaru yaarum thappa nenakka vendam avara mannichirungaSorry vaayuputhra ennoda friend than villu padam paathathula irunthu mental aagitaru yaarum thappa nenakka vendam avara mannichirunga
ReplyDeleteThambi vaayu adakki vaasinga.Thambi vaayu adakki vaasinga.
ReplyDelete