Followers

Copyright

QRCode

Monday, April 29, 2013

தன்னை தானே செதுக்கியவன்- Ajith Birthday Special

 (முதலில் ஒரே பதிவாக எழுதி முடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன் , ஆனால் உட்கார்ந்து  எழுத எழுத நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்ததால் அஜித்தின் சினிமா வாழ்க்கை முழுவதையும் ஒரு மினி கட்டுரையாக இரண்டு மூன்று பதிவாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் ,தல ரசிகர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்  )


முதலில் என் மனம் கவர்ந்த நாயகன் தல அஜீத் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்துக்களை சொல்லிவிடலாம் ... அஜீத் அவர்கள் என்னை பொறுத்தவரை  சினிமா துறையில் ஒரு அதிசயம் , காரணம் அவர் வாழ்க்கையில் அதுவாகவே நடந்த அல்லது அவராகவே நடத்திய எல்லாமுமே ஒரு அதிசயம்தான்... ஒழுங்காக தமிழ் பேச தெரியாத, நகைசுவையாக நடிக்க தெரியாத , சரியாக ஆட தெரியாத , உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்காத , சினிமாவில் எந்த பின்புலமும் ,அடைக்கலமும் இல்லாத , தன் ரசிகர்களை ஏமாற்ற தெரியாத ஒரு நடிகனுக்கு இவை எல்லாம் இருக்கும் அல்லது இருப்பது போல காட்டி கொள்ளும் நடிகர்கள் நிறைந்த ஒரு திரையுலகில் அவர்களால் நினைத்து பார்க்க முடியாத அளவு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருப்பதே ஒரு அதிசயம்தானே ... ஒரு நடிகன் மேடையில் என் நெஞ்சில் குடியிருக்கும் , என்னை வாழவைத்து கொண்டிருக்கும் என்பது போன்ற ரசிகர்களை குளிர்விக்கும் வாக்கியங்களை ஒப்பித்தால்  மட்டுமே இங்கு கை தட்டல் கிடைக்கும்  , ஆனால் ஒருவர்  மேடையில் தோன்றி விட்டாலே கை தட்டலும் விசில் சத்தமும் விண்ணை பிளக்கும் அளவு இருக்கிறது என்றாள் அந்த மேடையில் இருவர் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஒருவர் ரஜினி இன்னொருவர் தல... தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ரஜினிக்கு இப்படியான ரசிகர்கள் இல்லாமல் போனால்தான் அதிசயம் , ஆனால் தான் வாழ்க்கையில் இதுவரை தொடர்ந்து இரண்டு பெரிய ஹிட் (வாலி , அமர்க்களம் தவிர) கொடுக்காத ஆனால் தொடர்ந்து ஐந்து படங்களை கூட தோல்வியாக கொடுத்த அஜித்துக்கு இப்படியான ரசிகர்கள் இருப்பது  அதிசயம்தான் .. 


இன்று தன் அப்பா ,அம்மா , அண்ணன் என்று யாராவது சினிமாவில் இருந்ததை மட்டுமே காரணமாக கொண்டு சினிமாவுக்குள் நுழைந்த  சாதாரண ஹீரோ கூட தவறாமல் சொல்லும் ஒரு விஷயம் நான் நடிக்க வருவதற்க்கு முன்னரே சினிமாவை காதலித்தேன் , சினிமாவுக்காக என் உயிரையும் கொடுப்பேன் , எனக்கு எல்லாமும் இந்த சினிமாதான், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதர்க்காக சிறு வயது முதலே கஷ்டப்பட்டேன் என்பதுதான் , ஒரு சில நடிகர்கள் விஷயத்தில் இது உண்மையாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு விளம்பரத்துக்காகவே இது போன்ற வசனங்கள் எல்லாம் பலரும் பேசுவார்கள்.. சினிமாவில் அவர்களின் இருப்பை தக்க வைத்து கொள்ள அப்படியான விளம்பரங்களும் கண்டிப்பாக தேவை , ஆனால் தல ஒருவர்தான் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் , தன் லட்சியமான ரேஸில் கலந்து கொள்ள காசு சம்பாதிக்க மட்டுமே தான் சினிமாவில் நுழைந்ததாக வெளிப்படையாக கூறினார் அதுவும் தான் நடிக்க வந்த புதியதிலேயே... படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு , மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கி , ரேஸில் மீது இருந்த வெறியின் காரணமாக காசு சம்பாதிக்க சொந்தமாக தொழில் தொடங்கினார் , ஆனால் அவரை வெறும் தொழிலதிபராக மட்டுமே உருவாக்க விதி விரும்பவில்லை , ஆரம்பித்த தொழில் அனைத்தும் நஷ்டம் , கையில் சுத்தமாக காசில்லாத சமயத்தில் ரேஸிக்கு தேவையான காசு சம்பாதிக்க அவரிடம் இருந்த ஒரே மூலதனம் அவரின் அழகு மட்டுமே , அதை நம்பி அவர் மாடெலிங்கில் குதித்ததுதான் அவரின் சினிமா வாழ்க்கைக்கான முதல் புள்ளி...


அவரின் முதல் திரையுலக பிரவேசம் ஆந்திர தேசத்தில் , அவரை திரையுலகுக்கு கொண்டு வந்த பெருமை லக்ஷ்மி ப்ரொடக்ஷன் பூர்ண சந்திர  ராவ் அவர்களியே சேரும் , ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படம் தொடங்குவதற்க்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அதன் இயக்குனர் இறந்து விட படம் ஆரம்பித்த வேகத்திலேயே நின்று விட்டது.. ஆனால் இதெல்லாம் தன்னை பெரியதாக பாதிக்கவில்லை என்றுதான் அஜீத் சொல்கிறார் ,  சினிமா இல்லையென்றால் இன்னொரு துறை என்ற அளவிலேயே அவரின்  ஈடுபாடு சினிமாவின் மேல் இருந்தது... ஆனால் விதி அவரை விடுவதாக இல்லை , அடுத்த சில மாதங்களிலேயே அதே தெலுங்கு சினிமாவில் இன்னொரு வாய்ப்பு அவரை தேடி வந்தது , அது அவரின் முதல் படம் பிரேம புஸ்தகம் , அதுதான் தல கடைசியாக நடித்த நேரடி தெலுங்கு படம் , முதல் படம் வெளிவந்தாலும் கையில் காசு போதுமான அளவு தேரவில்லை , காசுக்காக அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார் , அப்படியான தேடலில் இயக்குனர் செல்வாவின்  கண்ணில் பட அமராவதி வாய்ப்பு கிடைத்தது , பிரேம புஸ்தகத்தில் நடக்காத ஒரு விஷயம் அமராவதியில் நடந்தது , படத்தின் பாடல்கள்  பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டடிக்க , அதன் மூலம்  படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்க   அப்படியே அதன் ஹீரோவான அஜீத்திற்கும் வெகு ஜன அறிமுகம் கிடைத்தது ... இவன் பெயர் அஜீத் என்று தெரியாமலேயே இவரின் முகம் மட்டும் சினிமா ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டிருந்தது அந்த படத்தின் பாடல்கள் மூலமாய் ... அடுத்ததாக பாசமலர்கள் என்ற படத்தில் காசுக்காக ஒரு சின்ன ரோலில் நடித்தார் ..தொடர்ந்து  மூன்று  படங்களில் நடித்ததும் கையில் கொஞ்சம் காசு புரள ஆரம்பிக்க அவரின் கனவான ரேஸுக்கு திரும்பி விட்டார்...

இம்முறை அவர் வாழ்க்கையில் விதி வேறுமாதிரியாக விளையாடியது , ரேஸில் அவர் பெரிய விபத்தில் சிக்கி கொள்ள முதுகெலும்பு ஒடிந்து படுத்த படுக்கையாக அடுத்த ஒரு வருடம் வீட்டில் கிடந்தார் , உடம்பில் தலையை தவிர வேறு எதையும் அசைக்க முடியாத நிலமை , ஆனால் அந்த விபத்துதான் அவரின் மனநிலையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது, ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருந்தார் ... அந்த நாட்கள் என் வாழக்கையில் சோதனையான காலம் , நான் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கபட்டிருந்த ஆரம்பத்தில் சினிமா துறையில் இருந்து சிலர் என்னை பார்த்து விட்டு சென்றனர் , ஒரு சில பத்திரிக்கைகளில் இது சம்பந்தமான செய்திகளும் வந்தது , ஆனால் நாள் ஆக ஆக எல்லாரும் என்னை மொத்தமாக மறந்து விட்டனர் ... சினிமாவில் இருந்து நான் முற்றிலும்  வெளியேற்றபட்டதை போல ஒரு உணர்வு.. அந்த தனிமைதான் என்னுள் சினிமாவின் மீது ஒரு வெறியை உருவாக்கியது , இந்த சினிமாவில் நாமும் சாதிக்க வேண்டும் என்ற வெறி என்னுள் உருவாகியது அந்த காலகட்டத்தில்தான்... தான் அதிகமாக நேசித்த ரேஸை தூக்கி எரிந்து விட்டு சினிமாவை தன் புதிய லட்சியமாக அஜீத் மாற்றி கொண்டார் என்றாள் அந்த காலகட்டத்தில் அவர் எவ்வளவு மன போராட்டங்களை சந்தித்திருப்பார்? இன்று அவரின் சக  ஹீரோக்களுக்கு இல்லாத ஒரு மன பக்குவம் அவருக்கு அமைய பெற்றிருக்கிறது என்றாள் அதற்க்கு காரணம் இப்படியாக அவர் தாண்டி வந்த பல போராட்டங்கள்தான்... சரி இனி எல்லாம் சினிமாதான் என்று முடிவெடுத்த தல அந்த சினிமாவில் எப்படி தன்னை தானே செதுக்கி இன்று இருக்கும் விஸ்வரூப நிலமைக்கு வளர்ந்தார்? அடுத்த பதிவில் சந்திப்போம்....                   

Wednesday, March 20, 2013

பரதேசி - நியாயமாரெ




இப்படி ஒரு படம் எடுக்கும் தைரியம் பாலாவுக்கு மட்டுமே வரும் , அதற்காக மட்டுமே அவரை பரதேசிக்காக பாராட்டலாம் , ஆனால் கையில் எடுத்த காரியம் வீரியமாக இருந்தாலும் அதை படைத்த விதத்தில் கொஞ்சம் என்ன அதிகமாகவே சறுக்கி விட்டார் பாலா ... எனக்கு பாலாவின் படங்கள் இதுவரை பிடித்ததே இல்லை , விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படம் எடுத்தாலும் அவர்களை தன மன அரிப்புக்கு ஊருகாயாகவே பயன்படுத்தி வந்திருக்காரே அன்றி இதுவரை அவர்களின் கஷ்டங்களை நேர்மையாக சொல்லியதே இல்லை , நான் கடவுளில் கூட தன கதாநாயகனின் வீரத்தை காட்டவே பிச்சைகாரர்கள் பயன்படுத்தபட்டார்கள்... சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்தில் இருந்த நேர்மை கூட  பாலாவின் எந்த படங்களிலும் இல்லை... பரதேசியும் அந்த வரிசையில் இணைந்து விட்டான் 

இந்த படத்தில் பாலா ஒரு ஊரை காட்டுகிறார் , அந்த ஊர் மக்கள் சந்தோசமாக ஆடி பாடி திரிகிறார்கள் , ஹீரோவும் அவர்களோடு மாமன் மச்சானாக பழகி திரிகிறான் , ஆனால் திடீரென்று ஒரு காட்சியில் பந்தியில் அவனுக்கு சோறு வைக்காமல் அவமானபடுத்தி விரட்டி விடுகிறார்கள் , ஏன் என்ன காரணம் என்பதை நாமாகத்தான் புரிந்து கொள்ளவேண்டும் , அதை வெளிப்படையாக சொல்லும் தைரியம் அல்லது நேர்மை இயக்குனரிடம் இல்லை...

கண்காணி என்று ஒருவன் வருகிறான் , அவனுடைய வேலை தேயிலை தோட்டத்துக்கு அடிமைகளை பிடித்து கொடுப்பது , அவன் வந்து இனிக்க இனிக்க பேசியவுடன் ஒரு கிராமமே பஞ்சம் பிழைக்க அவனுடன் தூர தேசம்  செல்ல முடிவெடுக்கிறது , அதற்க்கு அவசியம் என்னவென்பது சத்தியமாக எனக்கு புரியவில்லை , அங்கெ யாரும் அடிமை ஜீவனம் நடத்தவில்லை , கிராமத்தில் கிணறுகளில் , கண்மாயில் தண்ணீர் நிறைந்து இருக்கிறது , பஞ்சத்துக்கான அறிகுறியே அந்த கிராமத்தில் இல்லை , மாறாக ஒரு திருமண  விழாவை வெகு விமர்சியைகாக கிராமமே  கொண்டாடுகிறது , ஊருக்கே சோறு படைக்கிறார்கள்  , குடித்து கும்மாளமிடுகிறார்கள் , இவர்கள் பஞ்சம் பிழைக்க தூர தேசம் போகவேண்டிய அவசியம் என்ன? அப்படியே பணம் சம்பாதிக்க என்று எடுத்து கொண்டாலும் குழந்தை குட்டிகளுடன் ஏன் போக வேண்டும் ? இந்த ஒரு கேள்வியிலேயே ஒட்டு மொத்த படமும் படுத்து விடுகிறது ... அந்த கிராமத்து மனிதர்களின் எள்ளல் நக்கல் கொண்டாட்டங்களின் பின்னால் இருக்கும் வறுமையை பார்க்கும் நமக்கு கடத்தும் விதமான வீரியமான காட்சி ஒன்று கூட படத்தில் இல்லை ..

அந்த பயணத்தின் பொது ஒருவன் நடக்க முடியாமல் சக்தியிழந்து கீழே விழுந்து உதவி கேட்டு அழுகிறான் , ஆனால் கண்காணி சொல்லிவிட்டான் என்ற ஒரே காரணத்துக்காக அவனை அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள் , மற்றவர்களை விடுங்கள் அவனுடைய மனைவியே அவனை கை கழுவி விடுகிறாள் .. ஒருவர் கூட கண்காணியை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை ... அந்த காட்சியில் கண்காணியை சிலர் எதிர்த்து பேச , அப்பொழுதே கண்காணி தன்னுடைய கோர முகத்தை அவர்களிடம் காட்டுவதை போல இருந்தால் அந்த காட்சியின் வீரியம் இன்னும் கூடிஇருந்திருக்குமே ...பார்வையாளனுக்கு அவர்கள் மேல் ஒரு பரிதாபம் வர வேண்டும் என்பதற்காக இந்த காட்சியை இடைவேளை காட்சியாக வைத்திருக்கிறார் போல , ஆனால் பார்க்கும் நமக்குதான் ஒரு எழவும் வந்து தொலைய மாட்டேங்கிது ...

இடைவேளைக்கு பிறகு படம் அதிகபட்ச சோகத்துடன் நகருகிறது , ஆங்கிலேயர்கள் இந்தியர்களை எப்படி மாட்டை விட கேவலாமாக நடத்தினார்கள் , அதற்க்கு பணத்துக்கு ஆசைப்பட்ட சில இந்தியர்கள் எப்படி அவர்களுக்கு உதவினார்கள் என்பதை தனக்கே உரிய கொடூரமான காட்சியமைப்புகளின் மூலம் காட்டியிருக்கிறார் .... ஆனால் இதிலும் காமெடி என்றச் பெயரில் தன் சொந்த மன வக்கிரத்தை வெளிபடுத்தியிருக்கிறார் ... அந்த தேயிலை தோட்டத்தில் ஏதோ ஒரு விஷ  காய்ச்சல் பரவ அங்கு ஒரு கிருஸ்துவ மிஷினரி டாக்டர் வருகிறார் , நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதை விட்டு விட்டு அவர்களை மதம் மாற்றும் வேளையில் இறங்குகிறார் , மதம் மாறாதவர்களுக்கு சிகிச்சை கொடுக்க மறுக்கிறார் , கடைசியில் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடுகிறார் , அவரை பார்த்து ஒரு வெள்ளைக்காரன் நம்முடைய கன்கானியை விட மோசமானவன் இந்த ஆன்மீக கண்காணி என்று சொல்லுகிறான் , என்னதான் சுவை கம்மியாக இருந்தாலும் வாழை இழையில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது யாராவது ஒரு ஸ்பூன் மலத்தை உங்கள் இழையில் வைத்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது அந்த காட்சி ... அப்படி ஒரு காட்சி அமைப்பதற்கு தேவையோ , கட்டாயமோ படத்தில் இல்லை , இருந்தும் வலிந்து திணித்திருக்கிறார்.  

கிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் அதகளம்  , அதர்வா  தன்னுடைய குடும்பத்தை கட்டி பிடித்து அழும் போது அங்கெ ஒவ்வொரு பார்வையாளனையும் தன குடும்பத்தை நினைத்து பார்க்க வைத்து நம் நெஞ்சு குழியை அடைக்க வைத்து விட்டார்... ஆனால் அதர்வா ஏன் அவ்வளவு சத்தமாக அழுகிறார் என்றுதான் தெரியவில்லை , சேதுவில் கடைசியில் விக்ரம் ஒரு பார்வை பார்ப்பாரே ஆயிரம் அழுகை சொல்லாத சோகத்தை அந்த பார்வை சொல்லிவிடும் , அப்படியான ஒரு வாய்ப்பை பாலா இந்த கிளைமேக்ஸ் காட்சியில் வீணடித்திருக்கிறார் ...    அந்த காட்சியில் பின்னணி என்ற பெயரில் வாசித்திருக்கிறார் பாருங்கள் ஒரு வாசிப்பு , யோவ் G.V.பிரகாஷ் நீயெல்லாம் நல்லா வருவ ... பல காட்சிகளில் இவரின்  இசை கடுப்பை கிளப்புகிறது , இரண்டாம் பாதியில் கொஞ்சம் முழித்து கொண்ட கதாசிரியரை திரும்பவும் குழிக்குள் தள்ளும் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார் G.V.பிரகாஷ் ... 

மொத்தத்தில் இந்த பரதேசி அரைகுறையாக  அதீத உணர்சிகளோடு ஏழை/ ஒடுக்கப்பட்ட /தாழ்த்தப்பட்ட /சமூகத்தால் புறக்கணிக்க பட்ட  மக்களை  பற்றி பாலாவால் எடுக்கப்பட்ட , நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்தே இராத அவர்களின் கஷ்டங்களை காது கொடுத்து கேட்க கூட நேரமில்லாத அறிவு  ஜீவி அப்பாடக்கர்களால் பாராட்டப்படும் இன்னுமொரு படம் அவ்வளவே 

LinkWithin

Related Posts with Thumbnails