Followers

Copyright

QRCode

Friday, October 28, 2011

வேலாயுதம் - ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே


முதலில் பத்து வருடங்களுக்கு முன்னாள் வந்த ஒரு தெலுங்கு  படத்தை இப்பொழுது தமிழில் எடுத்து தமிழனின் ரசனையை கேவலபடுத்தியதர்க்காக இயக்குனருக்கு ரசிகர்கள் சார்பில் கண்டனங்கள் .... ஷங்கர் 1990 இல் இருந்து 2004 வரை கசக்கி பிழிந்து சாறு எடுத்த ஒரு கதையை, அவரே இனி இது உதவாது  என்று 8 வருடங்களுக்கு முன்னரே தூக்கி  குப்பையில் போட்ட கதையை மீண்டும் தோண்டி  எடுத்திருக்கிறார்கள் .... குப்பையை தோண்டினால் வைரமா வரபோகிறது குப்பைதான் வந்திருக்கிறது .... கேப்டன் முதல் சியான் வரை பலரும் செய்த மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ வேலையை கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் இந்த படத்தின் ஹீரோவும் செய்கிறார் ... ஆனால்மக்களை ரசிக்க வைக்க  எட்டு வருடங்களுக்கு முன்னரே அந்நியனில் இதே மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதைக்கு multiple personality என்று ஒரு புத்தம் புது ஊறுகாய் தேவைப்பட்டது ஷங்கருக்கு  .... ஆனால் இவர்கள் டி ஆர்  காலத்து தங்கச்சி சென்டிமென்ட்டை தூசி தட்டி ஊறுகாய் ஆக்கியிருக்கிறார்கள் ... பாஸ் இந்த ஊசி போன ஊறுகாயை எத்தனை நாளைக்குதான் நாங்க சாப்பிடுறது ...

இந்த படத்தின் ஆக பெரிய பலவீனம் என்னவென்றால் கதை திரைகதை காட்சியமைப்புகள் , பாடல்கள் , என்று எதிலுமே புதுசாக எதுவும்  கிடையாது எல்லாமுமே யூகிக்க கூடியது என்பதுதான்... முதல் பாதியில் ஹீரோவும் அவர் தங்கையும் காமெடி பண்ணுகிறோம் என்று சொல்லி மொக்கை போடுவார்கள்.. தியேட்டரில்  இருந்த ஹீரோவின்  ரசிகர்களை தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை ... அந்த காமெடிக்கு  சிரித்து கொண்டிருந்த ஒரு  ரசிகனை அவருடைய நண்பர்களே ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்தார்கள் ... முதல்  பாதியில் கொஞ்சமேனும் ரசிக்க வைத்த விஷயம் சந்தானம் வரும்   சில காட்சிகள்  ... அதை தவிர்த்து பெரியதாக ஒன்றும் இல்லை  ...

இரண்டாம் பாதிதான் படத்தின் மிக பெரிய மொக்கை ....வழக்கம் போல மக்களை காப்பாற்றுகிறேன்  என்று படம் பார்க்கும் நம்மை சாகடிக்கிறார் ஹீரோ....  கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லாத காட்சியமைப்புகள் , லாஜிக்கே  இல்லாத திரைகதை , ஏற்கனவே ஷங்கர் படங்களில் கேட்டு கேட்டு புளித்துப்போன வசனங்கள் , மொக்கையான கிளைமாக்ஸ் என்று பொறுமையை அளவுக்கு மீறி சோதித்து அனுப்புகிறார்கள் ... இந்த படம் ஒரு பத்து வருடங்களுக்கு முன் வந்திருந்தால் ரசித்திருக்கலாம் .... இன்றைய காலகட்டத்தில் இதை போன்ற படங்கள் கண்டிப்பாக பார்பவர்களுக்கு கடுப்பைதான் வரவழைக்கும் ...  வேலாயுதமும் அதைதான் செய்கிறது  ....

ஜெனிலியா , ஹன்சிகா , சரண்யா மோகன் என்று எல்லாருமே வீணடிக்கபட்டிருக்கிறார்கள்  ... மொத்தத்தில் என்னை பொறுத்தவரை வேலாயுதம் மழுங்கி போன பழைய ஆயுதம்  ... 


(இந்த படத்தை பற்றி எழுதம் போது  ஏதோ கே டிவி யில் பார்த்த பழைய படத்தை பற்றி எழுதுவது போல ஒரு பீல் வருவதால் இதற்க்கு மேல் எதுவும் எழுத பிடிக்கவில்லை... இந்த படத்தையும் நல்லா இருக்கு என்று சொல்லும் இந்த பட ஹீரோவின்  ரசிகர்களை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு காய்ந்து போய் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது ... இனிமேலாவது அவர்களின் ஆஸ்தான நடிகர் இதை உணர்ந்து நல்ல படங்கள் கொடுத்தால் அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும்  நல்லது ... இல்லை எனக்கு சினிமாவே  வேண்டாம் நான் முதலமைச்சர் ஆக போகிறேன் என்று அரசியலில் இறங்கி விட்டால்  தமிழ் சினிமாவுக்கே நல்லது)




Wednesday, October 26, 2011

ரா ஒன்



  .. 7 ஆம் அறிவு படம் மொக்கை என்று நேற்று இரவே தெரிந்துவிட்டபடியால்  வேறு வழியே  இல்லாமல் இந்த படம் பார்க்க நேர்ந்தது ... இந்த படம் பார்க்க இன்னொரு முக்கிய காரணம் இதற்க்கு முன் DVD யில் நான் பார்த்த ஷாருக்கானின் சில ஹிட் படங்கள் .... ஆனால் திரையில் நான் பார்க்கபோகும் முதல் ஷாருக்கான் படமே இவ்வளவு பெரிய மொக்கையாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை ...  படம் வருவதற்கு முன்னாள் இது எந்திரன் படத்தின் காப்பி என்று பரபரப்பாக பேசப்பட்டது... தானாக யோசித்து இப்படி ஒரு அட்டு படம் எடுத்ததற்கு பேசாமல் எந்திரனையே காப்பி அடித்திருக்கலாம் ...    ரஜினி ஒரு காட்சியில் வருகிறார் என்பதை தவிர எந்திரனுக்கும் இதற்கும் வேறு சம்பந்தம் கிடையாது... ஆனால் tron legacyயை கொஞ்சம் உல்ட்டா செய்து இந்த படம் எடுத்திருக்கிறார்கள்... 


இந்த படம் ஒரு வகையில் tron legacy படம் போன்றதுதான் .. அதில் நிஜ உலகில் இருந்து டிஜிட்டல் உலகிற்குள் மனிதர்கள் செல்லுவார்கள்... இதில் டிஜிட்டல் உலகில் இருந்து வீடியோ கேம் கதாபாத்திரங்கள் நிஜ உலகிற்குள் நுழைகின்றன... ஷாருக்கான் ஒரு வீடியோ கேம் ப்ரோகிராமர்... அவர் எப்பொழுதும் வீடியோ கேமில் ஹீரோவுக்கே அதிக பவர் இருக்கும்படியாக வடிவமைப்பார் .. ஆனால் அவரின் மகள் ஒரு சண்டை பிரியை .. அவளுக்கு ஹீரோவை விட வில்லனையே அதிகம் பிடிக்கும் ... காரணம் ஹீரோவுக்கு சில rules and regulations  இருக்கும் , ஆனால் வில்லனுக்கு அது கிடையாது ... அவன்  எதற்கும் கட்டுப்பட தேவையில்லை , ரொம்ப கூலாக இருந்துகொண்டு தான் நினைத்ததை முடிக்க எது வேண்டுமானாலும் செய்ய வில்லனால் மட்டுமே முடியும் (சிம்பிளா நம்ம மங்காத்தா தல மாதிரி) , தன மகளின் ஆசைக்கு கட்டுப்பட்டு ஷாருக் அப்படி ஒரு வில்லன் கதாபத்திரத்தை artificial intelligence உதவியுடன் வடிவமைக்கிறார் ... கூடவே அவனை அழிக்க ஒரு ஹீரோ... வில்லன் ரா ஒன் ... ஹீரோ ஜி ஒன் ... ஒரு எதிர்பாராத சயமத்தில் ரா ஒன் நிஜ உலகிற்கு ஷாருக்கின் மகளை கொல்லும் திட்டத்தோடு  நுழைகிறது ... ஷாருக்கின் மகள் எப்படி ரா ஒன்னை ஜி ஒன் உதவியுடன் அழிக்கிறாள் என்பதே மீதி கதை ... 

படத்தின் ஒரே பலம் ஷாருக் மட்டுமே  ... நேர்மையான ப்ரோக்ராமர் மற்றும் ஜி ஒன் என்று ரெட்டை வேடம் , முதல் பாதி முழுவதும் படம் கொஞ்சம் கலகலப்பாக செல்ல ஒரே காரணம் ஷாருக் மட்டுமே... மைக்கல் ஜாக்சன் வேடம் போட்டு  அவர் போடும் கெட்ட ஆட்டம் கலக்கல் ... பகவத் கீதையில் இருந்து தன மகளுக்கு நேர்மையின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகளில் பக்குவம் தெரிகிறது ... ஆனால் அவர் கதாபாத்திரம் இடைவேளைக்கு கொஞ்சமே கொஞ்சம் முன்னாள் சாகடிக்கப்பட்டு விடுகிறது... அதிலிருந்து ஜி ஒன்னின் அட்டகாசம்... ஜி ஒன்னின் அறிமுகம் சும்மா ரஜினி அறிமுகம் போல உள்ளுக்குள்ள நமக்கு அதிருது ... ஆனால் சுவாரசியமில்லாத திரைகதை , ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் என்று இயக்குனர் சொதப்பியதால்  கொஞ்ச நேரத்திலேயே நமக்கு நமநமத்து போகிறது.... 


ரஜினி வரும்  காட்சி பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை .. வழமையாக ஷாருக்கான் படங்களில் மற்ற நடிகர்கள் எப்படி பயன்படுத்தபடுவார்களோ அதேபோல இவரும் நக்கலடிக்கவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார் ... ரஜினியை காட்டும் போது கரீனா கபூர் தலையில் முக்காடு போட்டு கன்னத்தில் போட்டு கொள்ளுவதை ரஜினியின் தீவிர ரசிகர்கள் எப்படி எடுத்துகொள்ளுவார்களோ தெரியாது... எனக்கு ரஜினியோடு சேர்த்து நம்மையும் நக்கலடிப்பதை போலவே தெரிகிறது...   அந்த காட்சியில் ரஜினியை பார்க்கும் போது கந்தசாமியில் கிருஷ்ணாவை பார்த்தது போலவே இருந்தது ... வயசும் நோயும் சேர்ந்து ரஜினியின் கம்பீரத்தை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துவிட்டனவோ?    

படத்தின் மிக பெரிய பலவீனம் லாஜிக் ஓட்டைகள் படம் முழுவதும் நிரம்பி கிடப்பதுதான் , குறிப்பாக வீடியோ கேம் கதாபாத்திரங்கள் எப்படி நிஜ உலகிற்குள் நுழைகின்றன , கேமில் simulation மூலம் இயங்கும் அவைகள் நிஜ உலகில் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கான ஏற்றுக்கொள்ளும் படியான விளக்கம் எதுவும் படத்தில்  இல்லை , அதேபோல் இரண்டாம் பாதி முழுவதும் எளிதில் யூகித்து விட கூடிய காட்சியமைப்புகள்..  நிஜ உலகில் நடக்கிறதா இல்லை டிஜிட்டல் உலகில் நடக்கிறதா என்று புரிந்து கொள்ளமுடியாத கிளைமாக்ஸ்  என்று பல விஷயங்கள் என்னதான் கிராபிக்ஸ் மலைக்க வைத்தாலும் படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்து விடுகின்றன... 

நான் இந்த படத்தை சென்னை கோயம்பேடு ரோகினி காம்ப்ளெக்ஸ்சில் பார்த்தேன் ... அதில் இன்று வெளியான மூன்று படங்களுமே திரையிடபட்டிருந்தன ... ரா ஒன் திரையிடப்பட்ட திரையரங்கில் காலையில் வேலாயுதம் ஸ்பெஷல் ஷோ திரையிடபட்டிருந்தது... நாங்கள் திரையரங்கிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த போது வேலாயுதம் கிளைமாக்ஸ் ஓடிகொண்டிருந்தது ... அப்பொழுது இருவர் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்  .. ஆனால் தியேட்டர் ஊழியர்கள் அவர்களை வெளியே போகவிடாமல் வீட்டுக்கு போகணும் சார் என்று  அவர்கள் கெஞ்சியும்  கேட்காமல் அவர்களை மீண்டும் தியேட்டருக்குள் அனுப்பி கதவை மூடிவிட்டார்கள்... அதை பார்த்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் விஜயை பற்றி வரும் எஸ்எம்எஸ் எல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் போல என்று நக்கல் விட்டார் ... அதேபோல் இன்னொரு திரையரங்கில் 7 ஆம் அறிவு பார்த்து விட்டு வெளியே வந்த கும்பலில் ஒருவர் எங்களை நோக்கி யாராவது 7 ஆம் அறிவு படம் பார்க்க  நின்றுகொண்டு இருந்தால்  இப்படியே தப்பிச்சி ஓடிருங்க என்று எச்சரித்து விட்டு சென்றார் ... முதல் நாள் மௌத் டாக்கில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது ... 7 ஆம் அறிவோ இல்லை வேலாயுதமோ ஹிட் ஆக வாய்ப்பு இருக்கே  தவிர பெரிய அளவில் வசூலை குவிக்க முடியாது என்பதுதான் அது ... ஸோ இந்த வருடத்தின் ஒரே ப்ளாக்பஸ்டர் தலையோட மங்காத்தா மட்டும்தான் ... 2011  தமிழ் சினிமாவை பொறுத்தவரை தல வருஷம்... அதே போல ஒபெநிங்கை பொறுத்த வரை தலைதான் கிங் என்பதை ஆகஸ்ட் 31 மற்றும் இந்த தீபாவளிக்கு தியேட்டரில் கூடிய கூட்டங்கள் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துவிட்டன ... 5  நாளில் 27 கோடி இல்லை அதில் பாதி 14 கோடி கூட இந்த படங்களால் வசூலிக்க முடியாது என்பது இந்த ஒரே நாளில் தெரிந்துவிட்டது ...    

THIS DEEPAVALI CLEARLY SHOWS THALA IS THE ONE AND ONLY EMPEROR OF OPENING  IN TAMIL CINEMA

LinkWithin

Related Posts with Thumbnails