Followers

Copyright

QRCode

Thursday, September 9, 2010

(மக்கள்) எப்பாடு பட்டாலும் ... (ஊழலில்) பிற்பாடு கொடாதவர்" பரம்பரை

நாலு பேருக்கு நல்லதுன்னா நாம எது பண்ணுனாலும் தப்பு இல்லை.... நாயகன் படத்துல கமல் பேசுன வசனம்... அதே மாதிரிதான் ஒருத்தர்  ஊழல்  பண்ணுரதுனால நாப்பது பேர் நல்லா வாழ முடியும்னா அவர் பண்ணுற ஊழலுல தப்பே இல்லை .. இங்கயும் ஒருத்தர் ஒரு நாட்டையே சுரண்டி பணம் சம்பாதிச்சி வச்சிருக்காரு,,, ஆனா அது அவருக்காக இல்ல அவர நம்பி இருக்கிற நாம்பது பேருக்காக... அவர் யாரு? அந்த நாப்பது பேரு யாருன்னு பாக்கனும்னா கீழ இருக்கிற  படத்த click பண்ணி நல்லா பெருசா பாருங்க... 




இதுதான்ய உண்மையான வம்சம்... சரி இந்த வம்சத்துக்கு என்ன பேரு வைக்கலாம்... ரொம்ப நேரம் யோசிச்சி பாத்தேன் எனக்கு மனசுல வந்த பேர் "(மக்கள்)  எப்பாடு பட்டாலும் ... (ஊழலில்) பிற்பாடு கொடாதவர்" பரம்பரை ...

மேல இருக்கிற நாப்பது பேரு நல்லா இருக்கனும்கிரதுக்காக ஒரு மாநிலமே உழைச்சி கொட்டுறோம்... 

வாழ்க ஜனநாயகம் ... வளர்க வல்லரசு இந்தியா

Wednesday, September 8, 2010

கமல் சகாப்தமா சறுக்கலா?




தமிழ் சினிமாவை நேசிக்கும் பலரும் நேசிக்கும் ஒரு மாபெரும் நடிகன் கமல்... நவரசங்கள் என்று சொல்லுவார்களே அதில் அனைத்தும் ஒருங்கே அமைய பெற்ற கலைஞன் அவர்... ஹீரோயிசம் , புளித்துப்போன செண்டிமெண்ட் என்று அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து கொண்டு இருந்த தமிழ் சினிமாவில் வித்தியாசம் என்னும் வார்த்தையின் அர்த்தம் இவர் மூலாமாகவே ரசிகர்களுக்கு தெரிய வந்தது... எண்ணற்ற ரசிகர்கள் அவருக்கு இருந்தாலும் அவர்களை மேலும் மேலும் முட்டாள்கள் ஆக்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் அவரிடம் இருந்ததில்லை... ரசிகர்களை உசுப்பேத்தி விடும்படியான வசனங்கள் அவர் படங்களில் ஒருபோதும் இருப்பதில்லை ... நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஆணித்தரமாக முதலிலேயே கூறி விட்டார்... மற்றவர்களை போல தன படங்களில் நான் இப்ப வருவேன் , அப்பறமா வருவேன் .. நேரம் வரும்போது வருவேன் என்று வசனம் பேசி ஒரு ஹைப் உருவாக்கி படத்தை ஓட வைக்க அவர் ஒருபோதும் விரும்பியதில்லை... 


தன்னுடைய மசாலா படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் அடுத்த படம் அதே போல மசாலா தனமாக இல்லாமல் வேறு பாணியில் எடுக்கும் தைரியம் இருக்கும் ஒரே நடிகன் தமிழ் சினிமாவில் அவர் மட்டுமே... இந்தியன் என்று ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்று இருக்க , அடுத்த படம் மிகவும் சாதாரணமான நகைசுவை படம் காதலா காதலா... இந்த தைரியம் யாருக்கு வரும் ...அவர் நினைத்திருந்தால் சகலகலா வல்லவன் பாணியிலேயே பத்து படங்கள் தொடர்ந்து கொடுத்து பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகன் விரும்பும் பாதையில் தானும் சென்று அவனை முட்டாளாக்கி கஷ்டமே இல்லாமல் பணமும் , புகழும் சம்பாதித்து இருக்கலாம்... ஆனால் ரசிகர்களின் ரசனையை கொஞ்சமேனும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக யாரும் போக துணியாத பாதையில் பயணபட்டார்.. இன்று நம் நாட்டில் படித்த மக்களிடமாவது உலக படம் பார்க்கும் பழக்கம் வந்திருக்கிறது என்றால் அதற்க்கு கமல் ஒரு மிக பெரிய காரணம்... இப்படியும் படம் எடுக்கலாம் என்று நமக்கு அறிமுகம் செய்தவரே அவர்தான்... 


இன்னொரு விசயம் கமலிடம் எனக்கு பிடித்தது அவரது வெளிப்படையான செயல்பாடுகள்... தன்னுடைய இலக்கு இதுதான் என்பதில் எப்பொழுதும் ஒரு தீர்மானமான முடிவு அவரிடம் இருக்கும்... கடவுள் நம்பிக்கை கிடையாது என்று வெளி உலகிற்கு மட்டும் வேஷம் போடாமல் அதை உண்மையாக கடைபிடிப்பவர்... 


ஆனால் இன்று நிறைய பேர் கமலை எதிர்த்து வைக்கும் வாதம் அவர் வேற்று மொழி படங்களை காப்பி அடிக்கிறார் என்பது... ஆமாம் அவர் காப்பி அடிக்கிறார் இல்லை என்று சொல்லவில்லையே... ஆனால் அவர் அப்படி காப்பி அடித்து மக்களிடம் கொண்டு செல்லும் விஷயம் நல்ல விஷயங்கள்தானே... மிகவும் கஷ்டபட்டுதானே அதை மக்களிடம் கொண்டு சேர்கிறார் அவர்... இன்று எல்லா கதாநாயகர்களும் சரி இயக்குனர்களும் சரி திரும்ப திரும்ப கஷ்டமே இல்லாமல் காதல் இல்லை ஹீரோயிசம் என்றுதானே காட்டி கொண்டு இருக்கிறார்கள்... கமலும் அப்படி கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாமல் திரும்ப திரும்ப வேட்டையாடு விளையாடுவோ, இல்லை சகலகலா வல்லவனோ எடுத்து மூட்டை மூட்டையாக பணம் சம்பாதித்து இருக்கலாம்... எதற்கு அவர் விரும்பாண்டி , ஹே ராம் , ராஜபார்வை என்று கஷ்டப்பட்டு படம் எடுக்க வேண்டும்... அவர் ராஜபார்வை எடுத்த பொழுது அந்த படத்தை மொக்கை என்று பார்க்காமல் விட்ட கடைகோடி தமிழன் இன்று அவர் எடுத்த விரும்பாண்டியை நல்ல படம் என்று பாராட்டுகிறான்... இந்த மாற்றமே அவர் செய்த சாதனை... முழுக்க முழுக்க இதில் அவர் பங்கு மட்டுமே இல்லை என்றாலும் இந்த மாற்றத்தின் மிக பெரிய பங்கு அவருக்கு உண்டு ... கண்டிப்பாக அவர் இல்லை என்றால் தமிழ் சினிமா இன்னமும் பத்து வருஷம் பின்னோக்கித்தான் இருந்திருக்கும் ... 


அவரை காப்பி அடிக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... கமலை திட்ட அவரிடம் வேறு குறைகள் கொஞ்சம் உண்டு (அவை என்ன என்பதை நான் இங்கு சொல்ல போவதில்லை இந்த பதிவின் நோக்கம் அது இல்லை), அதை கையில் எடுத்து திட்டுங்கள் , தயவு செய்து அவர் எடுக்கும் வித்தியாசமான முயற்ச்சிகளை காப்பி என்று ஏளனம் செய்யாதீர்கள்... அவரும் இதை செய்யவில்லை என்றால் தமிழ் ரசிகன் பார்பதற்கு மசாலா குப்பைகள் மட்டுமே மிச்சம் இருக்கும்...


LinkWithin

Related Posts with Thumbnails