Followers

Copyright

QRCode

Wednesday, April 22, 2009

கவிதைகள்


என் உயிர் போனால்

உனக்கு அழுகை

வருமோ வராதோ?

எனக்கு தெரியாது
ஆனால் உனக்கு

அழுகை வந்தால்

என் உயிர் போய் விடும்....


திட்டும் இதழ்கள்

எல்லாம் கொஞ்சுமா

என்று எனக்கு தெரியாது...

ஆனால் நீ

திட்டுவதே கொஞ்சுவது

போல்தான் உள்ளது....


புதியதாய் வாங்கிய

புடவையை பார்த்து

"ஹேய் எனக்கா இந்த புடவை"

என்று நீ குதுகளிதாய்..."

ஹேய் எனக்கா இந்த தேவதை "

என்று நான் குதுகளிதேன்

எனது கவிதைகள்



என்னை ஊர் கிறுக்கன் என்றது...

நீ நடந்து

விட்டு சென்ற

உன் பாதசுவடுகளுக்கு

குடை பிடிதேனாம்....

அவர்களுக்கு எங்கே தெரியும்

உன் பாதம் பட்டால்

மண்ணும் உயிர் பெரும் என்று...

உன் விழி பட்டு

உயிர் பெற்ற

என் இதயத்திற்கு தானே

அது தெரியும்......



காற்றில் ஆடும்

உன் கலைந்த

முடியில்

ஊசல்ஆடியது என் இதயம்....

நீ அழகாய் அதை

உன் கையால்

உன்னோடு இழுத்து

கொண்ட போது

முடியோடு சேர்ந்து

உன்னோடு வந்து விட்டது

என் இதயமும் ........

LinkWithin

Related Posts with Thumbnails