Wednesday, December 8, 2010

பிரபலங்களின் பயோடேட்டா

குமுதம்ல வந்துகிட்டு இருக்கிற பயோடேட்டா பகுதி நான் விரும்பி படிக்கும் ஒன்று ... அதே போல நானும் எழுதவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை .. இப்ப அரசியல் சீசன் வேற ,வழக்கம் போல இதுக்கும் ஆதரவு கொடுக்க  நாலு பேராவது தயாரா இருப்பாங்கன்னு நம்பி அப்பப்ப நம்ம அரசியல்வாதிகளை பற்றி பயோ டேட்டா எழுதலாமேன்னு முடிவு பண்ணிட்டேன் ... ...

இது முதல் பதிவு என்பதால் இந்த முறை நம்ம அம்மாவும் , சூப்பர் ஸ்டாரும், அடுத்த முதல்வர் விஜய் அவர்களும்  அவங்க பயோடேட்டாவ சொல்ல போறாங்க ...

முதலில் அம்மா

பெயர் : அம்மா

புனை பெயர் : அதுவும் அம்மா

சமீபத்திய தொழில்: போராட்டம் நடத்துவது

நீண்ட கால் தொழில் : கொடநாட்டில் ஓய்வெடுப்பது


நண்பர்கள் : தன காலில் விழும் அனைவரும்

எதிரிகள் : ஒரு பரம்பரை முழுவதும் 

அடிமைகள் : கூட்டணி கட்சி தலைவர்கள்

நம்புவது : ராகுல் மற்றும் இளங்கோவன்

நம்பாதது : அன்னையை


விரும்புவது : மக்களின் மறதி

வெறுப்பது : மக்களின் பணத்தாசை

சமீபத்திய சாதனை : மதுரையில் மக்கள் வெள்ளம்

நீண்டகால சாதனை : தனி ஆளாக கட்சியை கட்டிக்காப்பது

சமீபத்திய சந்தோசம் : ஸ்பெக்ட்ரம்

நீண்டகால சந்தோசம் : இறந்த பின்னும் MGR ரசிகர்கள் அவருக்காக  ஒட்டு 
போடுவது


அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார்


பெயர் ; சிவாஜி ராவ் கெயிக்வாட்

புனைபெயர் : ரஜினிகாந்த்

பிடித்த பெயர் : சூப்பர் ஸ்டார்

பழையதொழில் : பஞ்ச் வசனம் பேசுவது படங்களில்

புதியதொழில் : பஞ்சராகி வசனம் பேசுவது  மேடைகளில்

நண்பர்கள் : இமயமலை ஞானிகள்

எதிரிகள் : மேடையில் அவர் பக்கத்திலேயே இருப்பார்கள்

ரொம்ப நல்லவர்கள் : ரசிக கண்மணிகள்

சமீபத்திய கடவுள் : பால்தாக்ரே

நீண்டகால கடவுள் : பாபா

பிடித்தது : விசில் அடிக்கும் ரசிகன்

பிடிக்காதது :  கேள்வி கேட்கும் ரசிகன்

சமீபத்திய எரிச்சல் : பிரியாணி கேட்ட ரசிகன்

நீண்டகால எரிச்சல் : அரசியலுக்கு கூப்பிடும் ரசிகன்  

சமீபத்திய சாதனை : 150 கோடியில் தமிழில் ஒரு படம்

நீண்ட கால சாதனை : தியேட்டர்களை வாழ வைத்தது ...

சமீபத்திய சந்தோசம் : மகளின் திருமணம்

நீண்ட கால் சந்தோசம் : என்றும் சூப்பர் ஸ்டார் பட்டம்


அடுத்து நம்ம இளையதளபதி விஜய்


பெயர் : ஜோசப் விஜய்

பிடித்த பெயர் : இளையதளபதி

விரும்பும் பெயர் : முதல்வர் விஜய்

நண்பர்கள் : அவர் அப்பா மட்டுமே

எதிரிகள் : அதுவும் அவர் அப்பா மட்டுமே

பிடித்த விஷயம் : உளறுவது பேட்டிகளில்

பிடிக்காத விஷயம் : நடிப்பது படங்களில்

நம்புவது : நடிகைகளின் சதையை

நம்பாதது : இயக்குனரின் கதையை

பிடித்த விசயம் : ரீமேக் 

பிடிக்காத விசயம் : நஷ்டத்தை சரிகட்ட பணம் கொடுப்பது 

சமீபத்திய திட்டம் : முதல்வர் ஆவது

நீண்டகால திட்டம்: அமெரிக்க ஜனாதிபதி ஆவது

சமீபத்திய சாதனை : மலை உச்சியில் இருந்து அடிபடாமல் குதிப்பது

நீண்டகால சாதனை : ஹிட்டே கொடுக்காமல் அம்பது படம் எடுத்தது

சமீபத்திய எரிச்சல் : காங்கிரசில் மூக்குடைபட்டது

நீண்டகால எரிச்சல் : அரசியலில் எவனும் கண்டுகொள்ளாதது

ஆக விரும்புவது : ரஜினியாக

ஆகி கொண்டு இருப்பது : டி .ஆராக

சமீபத்திய பெருமை : டாக்டர் பட்டம் வாங்கியது  

சமீபத்திய அசிங்கம் : அதே பட்டத்தை விஜயகாந்தும் வாங்கியது  

                                                                                                                   --- (தொடரும்)

22 comments:

  1. செம கலக்கல்

    ReplyDelete
  2. கலக்கல்
    டிஆர் ., டாக்டர் கேப்டன் விஜயகாந்த் ., ரித்திஷ்
    எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  3. விஜய் பாவங்க...

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க.. தொடரட்டும் தங்கள் பணி..

    ReplyDelete
  5. நல்லா எழுதி இருக்கீங்க பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  6. ஹாஹா, விஜய்,டி.ஆர்,விஜயகாந்த்...
    கலக்கல். :)

    ReplyDelete
  7. @ ஆர்.கே.சதீஷ்குமார்

    நன்றி தல

    @ சி.பி.செந்தில்குமார்

    நன்றி தல என்னை பின்தொடர இணைந்தமைக்கு

    ReplyDelete
  8. @ ராஜாகோபால்

    அடுத்த பதிவுள போட்டிடுவோம்

    @ வினோ

    என்ன பண்ண நண்பா காமெடி பதிவு போடனும்னு பிளான் பண்ணுநாளே அவர்தான் ஞாபக்கத்துக்கு வரார்

    ReplyDelete
  9. @samudra

    நன்றி தங்கள் முதல் வருகைக்கு

    @ அரசன்

    நீங்க ஆதரவு கொடுக்க ரெடின்னா தொடர்ந்திடுவோம்

    ReplyDelete
  10. @ கே.ஆர்.பி .செந்தில்

    பாராட்டுக்கு நன்றி தல ....

    @illuminatti

    விஜய கலாய்ச்சாவே கலக்கல்தான ...

    ReplyDelete
  11. பயோடேட்டா சூப்பர் நண்பா,
    செம கலக்கல்...

    தொடருங்கள்........

    ReplyDelete
  12. 3 in 1 கலக்கல்... வழக்கமாக பயோடேட்டா எழுதும் கே.ஆர்.பி யே பாராட்டி இருக்கிறார் போல... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. சூப்பருங்கண்ணா எல்லாமே மாஸ்

    ReplyDelete
  14. சூப்பர் ....அதுவும் இந்த விஜய் பத்தி டபுள் ஓகே ............

    ReplyDelete
  15. டாகுடரு மேட்டருதான் டாப்பு....தூள் டக்கர்!

    ReplyDelete
  16. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

    நன்றி!

    ReplyDelete
  17. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

    நன்றி!

    ReplyDelete
  18. @ இம்சை அரசன் பாபு

    விஜய் பத்தி எழுதுனாலே குஷிதான் நமக்கு ...

    @ philosophy prabaakaran
    நன்றி தல

    @ மாணவன்

    நன்றி மாணவன்

    @ பண்ணிக்குட்டி ராமசாமி

    பண்ணிக்குட்டி அண்ணே நான் எழுதுணதுலேயே உருப்படியான ஒரு சில பதிவுகளில் அதுவும் ஒண்ணு ... அறிமுகபடுத்துனதுக்கு ரொம்ப நன்றி தல

    ReplyDelete
  19. நல்லாயிருக்கு ராஜா!! இன்றுதான் முதலில் வருகிறேன்! அடிக்கடி வருவேன்!

    ReplyDelete

write something about your view on this post...